சுனில் நரைன் பகலில்தான் தூங்குவார்.. யார் கூடவும் பேச மாட்டார்.. காரணம் தெரியுமா? – வாசிம் அக்ரம் பேட்டி

0
911
Narine

நடப்பு ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு பந்துவீச்சை தாண்டி பேட்டிங்கில் கொல்கத்தா அணியின் சுனில் நரைன் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் கொல்கத்தா அணியில் அவருடன் பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றியுள்ள வாசிம் அக்ரம் சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு 2012 ஆம் ஆண்டு சுனில் நரைன் வந்தார். அந்த சமயத்தில் கொல்கத்தா அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் மென்டராகவும் பாகிஸ்தானின் லெஜன்ட் வீரர் வாசிம் அக்ரம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது சுனில் நரைன் உடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து அவர் கூறி இருக்கிறார்.

- Advertisement -

சுனில் நரைன் பற்றி வாசிம் அக்ரம் கூறும் பொழுது ” மக்கள் அவரை ஒரு ஸ்பெஷலிஸ்ட் பந்துவீச்சாளராக கருதுவார்கள். ஆனால் அவரோ தற்போது பேட்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் ஒரு அமைதியான நபர். சில நேரங்களில் யாருடனும் பேசாமல் மிக அமைதியாக இருப்பார். அதுதான் சுனில் நரைன்.

அவருக்கு பிடித்த நிறம் ப்ளோராசென்ட் பிங்க். அவரை நீங்கள் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் அவருடைய பேட் மற்றும் பேட் கைப்பிடி எல்லாமே இந்த கலரில் தான் இருக்கும். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவரது காரைக் கூட அவர் அந்த நிறத்தில்தான் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் கொல்கத்தா அணியில் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த சமயத்தில், காலை உணவுக்கு சீக்கிரத்தில் வந்து விடுவேன். அப்பொழுது சுனில் நரைனை வீங்கிய கண்களுடன் பார்த்தேன். அப்பொழுது நான் அவருடன் வெஸ்ட் இண்டிஸ் பேச்சு முறையில் ஆங்கிலத்தில் ஹாய் மேட் என்ன நடக்கிறது என்று கேட்டேன். ஆனால் நான் பேசியது பிரிட்டிஷ் அல்லது அமெரிக்க அசன்ட் போல கூட இல்லை.

- Advertisement -

இதையும் படிங்க : ஹெட்டுக்கு ஒரு நியாயம்.. கோலிக்கு ஒரு நியாயமா?.. களத்தில் குதித்த கைஃப் இர்பான் பதான்

அப்பொழுது மேலும் ஏன் சோர்வாக இருக்கிறாய் என்று கேட்டேன். அப்பொழுது தான் புரிந்தது அவர் வெஸ்ட் இண்டீஸ் நேரத்தில் இருக்கிறார். எனவே அவர் ஐபிஎல் தொடர் காலத்தில் பகலில் தூங்கி இரவில் விழித்திருக்கிறார். அவர்களால் இந்திய நேரப்படி பழகிக் கொள்ள முடிவதில்லை” என்று தெரிந்தது என்று கூறி இருக்கிறார்.