தோனிக்காக ஜெர்சி நம்பரை மாற்றிய சிஎஸ்கே வீரர் சமீர் ரிஸ்வி – அவரே வெளியிட்ட உணர்வுபூர்வமான காரணம்

0
1129

இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் 22ஆம் தேதி தொடங்கி தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இதில் ரசிகர்களின் அதிக கவனத்தைப் பெற்று வரும் அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ்.

இதற்கு மிக முக்கிய காரணம் மகேந்திர சிங் தோனி. அவரது நிதானமாக அணுகுமுறையும், களத்தில் எடுக்கும் துல்லிய முடிவுகளும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போக இளைஞர்களின் முன்னுதாரணமாகவே மாறிவிட்டார் தல தோனி. அப்படி இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏலத்தில் எடுக்கப்படும் வீரர்களும் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்தே இருக்கும்.

- Advertisement -

2008ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட மேத்யூ ஹெய்டன், போலிங்கர், ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் சென்னை அணிக்காக சிறந்த இன்னிங்ஸ்களை வெளிப்படுத்தியுள்ளனர். அவ்வாறு அணித்தேர்விலும் சென்னை அணி சிறந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கும்.

அவ்வாறு கடந்த டிசம்பர் மாதம் இந்திய அணியில் அறிமுகமே ஆகாத யூபியைச் சேர்ந்த சமீர் ரிஸ்வி என்ற இளைஞனை 8.40 கோடிக்கு எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதிரடி ஆட்டக்காரரான இவர் பகுதி நேர சுழற் பந்துவீச்சாளரும் கூட என்பதால் இவரின் திறமை அறிந்தே சென்னை அணி எடுத்திருக்கிறது.

எனவே இவரும் முதல் போட்டியில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், இரண்டாவது போட்டியில் தான் களமிறங்கிய முதல் பந்திலேயே ரசித் கானின் ஓவரில் சிக்ஸர் அடித்து தன்னை நிரூபித்திருக்கிறார். பின்னர் சென்னை அணி வெற்றி பெற்ற பிறகு மகேந்திர சிங் தோனி குறித்து பேசிய சமீர் ரிஸ்வி தோனியின் ஜெர்சி நம்பர் எண் ‘7’ஐ தான் அணிய விரும்பியதாக கூறி இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்

- Advertisement -

“எனது ஜெர்சியில் 7ம் நம்பரை நான் அணிய விரும்பினேன். ஆனால் அந்த எண் தோனியுடையது. அதை என்னால் அணிய முடியாது. மேலும் எண் 1 எனக்கு மிகவும் பிடித்ததால் நான் அதையே தேர்வு செய்தேன். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை தேர்வு செய்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சென்னை அணியிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொள்கிறேன்.

இதையும் படிங்க: அன்கேப்டு 8.40கோடி.. அடுத்த ரெய்னா.. அசராமல் வாங்கிய சிஎஸ்கே.. யார் இந்த 20வயது சமீர் ரிஸ்வி?

மகேந்திர சிங் தோனியை சந்திக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. ஆனால் தற்போது அவருடன் இணைந்து விளையாடுவதை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அவர் என்னிடம் ‘எதற்கும் பதட்டப்படாமல் நீ உன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்து’ என்று கூறி இருக்கிறார். எனவே அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.