அன்கேப்டு 8.40கோடி.. அடுத்த ரெய்னா.. அசராமல் வாங்கிய சிஎஸ்கே.. யார் இந்த 20வயது சமீர் ரிஸ்வி?

0
1687
Rizvi

அடுத்த வருடம் ஐபிஎல் தொடருக்காக நடைபெற்றுக் கொண்டிருக்கும் மினி ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலக்குழு தனி ராஜாங்கம் நடத்திக் கொண்டிருக்கிறது.

யாரும் எதிர்பார்க்காத வீரர்கள் மேல் ஏலத்திற்கு சென்று, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், எதிர்பார்க்காத விலையில் வாங்கி அசத்தி கொண்டு இருக்கிறது.

- Advertisement -

இந்தியாவில் நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் துவக்க வீரராக மிகச்சிறப்பான செயல்பாட்டை கொண்டு இருந்த நியூசிலாந்தின் இளம் ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்தராவை 1.80 கோடிக்கு வாங்கியது.

இதற்கு அடுத்து சர்துல் தாக்கூரை நான்கு கோடிக்கு எடுத்தது. அடுத்து எல்லோருக்கும் ஆச்சரியம் கொடுக்கும் விதமாக டேரில் மிட்சலுக்கு அதிரடியாக சென்று 14 கோடிக்கு வாங்கி ஆச்சரியப்படுத்தியது.

இந்த நிலையில் இன்னொரு ஆச்சரியத்தை தரும் விதமாக இந்திய அண்டர் 19 அணிக்கு விளையாடிய 20 வயதான உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த வலதுகை பேட்ஸ்மேன் சமீர் ரிஸ்வியை 8.40 கோடிக்கு வாங்கி பிரமாதப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இவர் இதுவரையில் உத்தரபிரதேச அணிக்காக பதினொரு டி20 போட்டிகளில் ஒன்பது இன்னிங்ஸ்களில் 295 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அதிகபட்சமாக 75* ரன்கள் அடங்கும். இவருடைய ஆவரேஜ் 50 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 134 ஆகவும் இருக்கிறது.

இது மட்டும் இல்லாமல் இந்த ஆண்டு நடைபெற்ற உத்தர பிரதேசம் டி20 லீக்கில் அதிரடியாக 55 பந்துகளில் 122 ரன்கள் குவித்து எல்லோரது கவனத்தையும் கவர்ந்தார்.

இவர் விளையாடும் விதம் சுரேஷ் ரெய்னா போலவே இருக்கிறது என்று முன்னாள் தமிழக வீரர் அபினவ் முகுந்த் கூறியிருந்தார். மேலும் சுரேஷ் ரெய்னா இவர் உத்தர பிரதேச அதாவது லக்னோ அணிக்காகவே விளையாடினால் இன்னும் நம்பிக்கை அதிகரிக்கும் என்பதாக பேசி இருந்தார்.

இந்த நிலையில்தான் இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் டெல்லி அணியுடன் போட்டியிட்டு 8.40 கோடிக்கு வாங்கி ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. மேலும் இவரை அம்பதி ராயுடு இடத்துக்கு வளர்த்தெடுக்க சென்னை விரும்பலாம்!