“கிரிக்கெட்ல இந்த ஷாட்டுக்கு நான்தான் மாஸ்டர்.. எனக்கு நான்தான் கோச்” – பாபர் அசாம் பேச்சு

0
103
Babar

தற்போதைய காலகட்ட கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திற்கும் தன்னைத் தகவமைத்து மிகச் சிறப்பாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேனாக விராட் கோலி மட்டுமே இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக மூன்று கோடி ரூபாய் கிரிக்கெட்டிலும் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் இருந்து வந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் அடுத்த விராட் கோலியாக உருவெடுத்துவிட்டார் என்பதான பேச்சுகள் இருந்தது.

- Advertisement -

அவரும் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்தார். மேலும் விராட் கோலியின் 2019 முதல் இரண்டு ஆண்டுகள் பேட்டிங் சரிவில் இருந்தார். இதன் காரணமாக பாபர் அசாம் குறித்த பேச்சுகள் மிக அதிகமாக இருந்தது.

தற்பொழுது விராட் கோலி விட்ட தன்னுடைய பேட்டிங் பாமை மீட்டெடுத்து மிகச் சிறப்பான முறையில் நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடி தொடர் நாயகன் விருது பெற்றார்.

அதே சமயத்தில் பாபர் அசாம் பேட்டிங் கடந்த ஆண்டிலிருந்து சரிய ஆரம்பித்திருக்கிறது. இதன் காரணமாக அவர் கேப்டன் பதவி வரை பறிபோய் இருக்கிறது. தற்பொழுது நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தொடர்ந்து மூன்று அரை சதங்கள் அடித்து மீண்டும் வந்திருக்கிறார். ஆனாலும் அதற்கு முன்பான ஆஸ்திரேலிய டெஸ்ட் சுற்றுப்பயணம் நன்றாக அமையவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் அவர் தன்னுடைய கவர் டிரைவ் பற்றி பேசும்பொழுது “ஒரு பேட்டராக நீங்கள் ஒரு ஷாட்டை விளையாடும் பொழுது உங்களுடைய பதட்டம் குறைவாகும். நீங்கள் ஒரு பேட்டராக ஒரு ஷாட்டை அடிக்கும் போதும் மற்றும் ஒரு பவுண்டரி அடிக்கும் போதும் நிலமைகள் சாதாரணமாக மாறும்.

எனக்கு கவர் டிரைவ்தான் என்னுடைய பெரிய பலம். அந்த ஷாட்டை அடித்த பிறகு என்னுடைய நம்பிக்கை மிகவும் அதிகரிக்கும். கவர் டிரைவ் ஷாட் விளையாட அதிகம் உழைத்திருக்கிறேன். இப்போது அதில் நான் தேர்ச்சி பெற்றிருப்பதாக நம்புகிறேன்.

இதையும் படிங்க : “இங்கிலாந்துக்காக இந்த வேலையை மட்டும் நாங்க செய்யவே மாட்டோம்” – இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் பேட்டி

என்னுடைய பேட்டிங் சரியில்லாத இப்போது நான் அது குறித்து நிறைய பேருடன் பேசுகிறேன். மேலும் நான் விளையாடிய வீடியோக்களை தொடர்ந்து பார்க்கிறேன். நான் எங்கு தவறு செய்திருக்கிறேன் என்று சரி செய்து கொள்கிறேன். எத்தனை பயிற்சியாளர்கள் இருந்தாலும் நமக்கு நாம்தான் சிறந்த பயிற்சியாளர்களாக இருக்க முடியும். எனக்கு நானே பயிற்சியாளராக இருக்கிறேன். என்னுடைய தவறுகளை நான் கண்டுபிடித்து சரி செய்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்.