WTC.. நியூசிக்கு எதிரான ஆஸி டெஸ்ட் அணி அறிவிப்பு.. இந்தியாவின் இறுதிப் போட்டி வாய்ப்புக்கு முக்கிய தொடர்

0
122
Australia

தற்பொழுது நடைபெற்று வரும் 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி முதல் இடத்திலும் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இடத்திலும் இந்திய அணி மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்திய அணி உள்நாட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒரு போட்டியை வென்று ஒரு போட்டியை தோற்று இருக்கிறது. கைவசம் இன்னும் 3 போட்டிகள் இருக்கின்றன.

- Advertisement -

தற்பொழுது நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அனுபவம் இல்லாத நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்துக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு போட்டி எஞ்சி இருக்கிறது.

மேலும் ஆஸ்திரேலியா அணி உள்நாட்டில் கடைசியாக வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒன்றை வென்று ஒன்றைத் தோற்று இருக்கிறது.

- Advertisement -

இப்படி மூன்று அணிகளும் கடுமையாக மோதிக் கொண்டிருக்கும் நிலையில், இதில் இரண்டு அணிகளான முதல் இரண்டு இடத்தில் இருக்கும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதிக் கொள்ள இருக்கின்றன. இந்த டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா வெல்லும் பட்சத்தில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்புகள் இந்திய அணிக்கு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலியா 14 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் தேர்வுக்குழு அறிவித்திருக்கிறது.

இதையும் படிங்க : இது சிஎஸ்கே இல்ல.. கிளாசன் அதிரடியில் காலியான ஜேஎஸ்கே.. குவாலிபயரில் பிளிசிஸ் சொதப்பல்

பாட் கம்மின்ஸ் (கே), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், மிட்செல் மார்ஷ், மைக்கேல் நெசர், மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மிட்செல் ஸ்டார்க்.

- Advertisement -