நான் ஐசிசி அம்பாசிடர் கிடையாது.. ஆனால்.. – பாகிஸ்தான் பத்திரிக்கையாளருக்கு சுரேஷ் ரெய்னா பதிலடி

0
74
Raina

ஐசிசி நடத்தும் டி20 உலக கோப்பை தொடர் வருகின்ற ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் நாடுகளில் துவங்குகிறது. இதற்கு இந்தியாவில் இருந்து அம்பாசிடராக யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டிருக்கிறார். முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி நியமிக்கப்பட்டிருக்கிறார். தற்போது இது குறித்தான ஒரு விவாதத்தில் சுரேஷ் ரெய்னா அதிரடியான ஒரு பதிலை கூறியிருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக கிரிக்கெட் வர்ணனையில் இந்திய முன்னாள் வீரர்கள் ஆகாஷ் சோப்ரா மற்றும் சுரேஷ் ரெய்னா இருவரும் இருந்தார்கள். அப்பொழுது ஐபிஎல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதை பார்த்து, ஆகாஷ் சோப்ரா திரும்ப கிரிக்கெட் விளையாட வருவீர்களா? என்று கேட்டார்.

- Advertisement -

இதற்கு பதில் அளித்த சுரேஷ் ரெய்னா நகைச்சுவையாக “நான் சுரேஷ் ரெய்னா சாகித் அப்ரிடி கிடையாது” என்று கூறினார். அதாவது சாகித் அப்ரிடி ஓய்வு முடிவை வெளியிட்டு விட்டு பின்பு அதை வாபஸ் பெற்று விளையாடியவர். நான் அவரைப்போல செய்ய மாட்டேன் என்பதை கூறுவதற்கு சுரேஷ் ரெய்னா இப்படி சொல்லி இருந்தார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவர் தற்போது ஷாகித் அப்ரிடி டி20 உலக கோப்பை அம்பாசிடராக நியமித்திருப்பது பற்றி பதிவிடுகையில் அதில் ” ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பைக்கு தூதுவராக சாகித் அப்ரிடி நியமிக்கப்பட்டிருக்கிறார். ஹலோ சுரேஷ் ரெய்னா!” என்று கூறியிருந்தார்.

அதாவது சுரேஷ் ரெய்னா தன்னுடைய ஓய்வு முடிவை திரும்பப் பெறுவது குறித்து நகைச்சுவையாக கூறிய விஷயத்திற்கு, இதை அத்தோடு சேர்த்து வைத்து அவர் சுரேஷ் ரெய்னாவை பேசியிருந்தார். இதற்கு சுரேஷ் ரெய்னாவிடமிருந்து என்ன மாதிரியான பதில் வரும் என எல்லோரும் காத்திருந்தார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : உலக கோப்பை இந்திய அணி செம தான்.. ஆனா நடராஜனை இதுக்காக எடுத்திருக்கலாம் – மேத்யூ ஹைடன்

தற்பொழுது இதற்கு பதில் அளித்திருக்கும் சுரேஷ் ரெய்னா கூறும் பொழுது “நான் ஐசிசி தூதராக இல்லை. ஆனால் எனது வீட்டில் 2011 உலகக் கோப்பை உள்ளது. மொகாலியில் ஆட்டம் நினைவிருக்கிறதா? அது மறக்க முடியாத சில நினைவுகளை தரும் என்று நினைக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார். 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்தது குறித்து இப்படி சூசகமாக சுரேஷ் ரெய்னா பேசியிருக்கிறார்.