டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்க மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி சில வாரங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டது.
அணி தேர்வு குறித்து சில விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதற்கான விளக்கத்தையும் ரோகித் சர்மா மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் அளித்தனர். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் 2024 டி20 உலக கோப்பைக்கு இந்திய அணி ஒரு சீரான நல்ல அணியை கொண்டிருப்பதாகவும், ஆனால் நடராஜன் இந்த காரணிகளுக்காக தேவைப்படுகிறார் என்றும் கூறியிருக்கிறார்.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் இடது மற்றும் வலது காம்பினேஷனில் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும் எனவும் அடுத்த வரிசையில் விராட் கோலி களமிறங்க வேண்டும் எனவும் கூறி இருக்கிறார்.
மேலும் வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவது நல்ல உத்தி எனவும் கூறி இருக்கிறார். மேலும் ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் சுழற் பந்துவீச்சாளர்களாக இருப்பது மட்டுமின்றி ஆல்ரவுண்டர்களாக இருப்பதால் அது இந்திய அணிக்கு பெரிய நன்மை கொடுக்கும் எனவும் பதில் அளித்திருக்கிறார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியான ‘மென் இன் ப்ளூ’ நிகழ்ச்சியில் டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் சமநிலை குறித்து மேத்யூ ஹைடன் விரிவாக கூறும்பொழுது
“ரோகித் சர்மா ஒரு தலைவராக சிறந்து விளங்குகிறார். இதற்கு முன்னர் பெரிய தொடர்களில் விளையாடிய அனுபவமும் அவருக்கு இருக்கிறது. வேகப்பந்துவீச்சாளர்களாக பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் வலுவான தேர்வாக இருப்பார்கள். ஆனால் இந்த அணியில் நடராஜன் இடம் பெற்று இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
ஏனெனில் ஐபிஎல்லில் மிகச் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார். அதுபோலவே உலகக் கோப்பையிலும் இறுதிக்கட்டத்தில் டெத் ஓவர்களில் அவரால் நன்றாக பந்து வீச முடியும். ஓட்டு மொத்தமாக பார்க்கையில் இது ஒரு சமநிலையான மிகச் சிறந்த அணி. சூரியகுமார் யாதவ் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் உலகத்தரமான புதுமையான பேட்ஸ்மேன்களாக விளங்குகிறார்கள். இந்தத் தலைமுறையில் அவர்கள் மற்ற வீரர்களை காட்டிலும் புதுமையான விஷயங்களை செய்கிறார்கள்.
இதையும் படிங்க:கோலி குழப்பம் பண்றது.. வாயில விரல் வச்சி சைலன்ஸ் சொல்றது.. எல்லாமே சரிதான் – மைக்கேல் வாகன் பேச்சு
மேலும் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இருப்பது இந்திய அணிக்கு ஒரு பெரிய போனஸ். மேலும் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சார் பட்டேல் ஆகியோர் சுழற் பந்து ஆல்ரவுண்டர்களாக இருப்பது இந்தியாவின் பேட்டிங் ஆழத்தை அதிகரிக்கிறது. இந்தியாவின் வேகத் தாக்குதலுக்கு பும்ரா உறுதுணையாக இருப்பார். ஒட்டுமொத்தமாக இந்தியா கலவையான சமநிலை அணியைக் கொண்டுள்ளது. ஆனால் கடந்த 50 ஓவர் உலக கோப்பையிலும் இதையேதான் நம்பினோம். உண்மையில் பேப்பர்களில் இருக்கும் பெயர்களை விட, நல்ல மனநிலையுடன் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தினால் மட்டுமே வெல்ல முடியும்” என்று கூறியிருக்கிறார்.