2வது டெஸ்ட் விசாகப்பட்டினம் மைதானம் எப்படியானது?.. மழை வாய்ப்பு உண்டா? புள்ளி விவரங்கள் என்ன சொல்கிறது

0
1636
Rohit

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் பிப்ரவரி 2ஆம் தேதி நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயம் மிக அதிகம். தோல்வி அடையும் பட்சத்தில் அடுத்து ஏதாவது ஒரு மேட்ச் டிரா ஆனால் கூட இந்தியா தொடரை வெல்ல முடியாது.

- Advertisement -

மேலும் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா புதிய திட்டங்களை கொண்டு வரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதன் காரணமாக இரண்டாவது போட்டிக்கு தற்பொழுது எதிர்பார்ப்புகள் இந்திய அணியின் பக்கமாக திரும்பி இருக்கிறது. இங்கிலாந்து எப்படி பாஸ்வால் முறையில் இந்தியாவில் விளையாடும் என்கின்ற எதிர்பார்ப்பு முடிவுக்கு வந்திருக்கிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி நடக்க இருக்கும் விசாகப்பட்டினம் மைதானம் எப்படியானது? பேட்டிங் மற்றும் பந்து வீச்சுக்கு எப்படியான சாதகங்கள் இருக்கின்றன? போட்டி நாளில் மழைக்கான அச்சுறுத்தல்கள் இருக்கிறதா? என்பது குறித்து இந்தச் சிறிய கட்டுரையில் பார்க்கலாம்.

விசாகப்பட்டினம் மைதானம் கருப்பு மண்ணால் உருவாக்கப்பட்ட ஆடுகளத்தை கொண்டது. எனவே இங்கு பெரிய அளவில் பவுன்ஸ் ஹைதராபாத் போல இருக்காது. மேலும் இங்கு முகமது சமி 5 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார், அதேபோல் ரவிச்சந்திரன் அஸ்வினும் இரண்டு முறை 5 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். எனவே ஆடுகளம் ஒரே பக்கமாக மட்டும் ஒத்துழைக்காது.

- Advertisement -

2016 மற்றும் 2019 இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக இந்தியா இங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இரண்டையும் வென்று இருக்கிறது. மொத்தம் இந்த மைதானத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மைதானத்தில் மயங்கி அகர்வால் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 215 ரன்கள் அடித்தது அதிகபட்சமாக இருக்கிறது. மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டு டெஸ்டில் 16 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்வீழ்த்திய பந்துவீச்சாளராக இருக்கிறார்.

சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்: 478
சராசரி 2வது இன்னிங்ஸ் ஸ்கோர்: 343
சராசரி 3வது இன்னிங்ஸ் ஸ்கோர்: 263
சராசரி 4வது இன்னிங்ஸ் ஸ்கோர்: 174 என இந்த மைதானத்தில் நான்கு இன்னிங்ஸ் ஸ்கோர்களும் அமைகின்றன.

இதையும் படிங்க : “இது 2021 கிடையாது.. மோசமான ஸ்பின் பிட்ச் கூட போடுங்க” – இங்கிலாந்து விக்கெட் கீப்பர் சவால்

இந்தக் காரணத்தினால் டாஸ் வெல்லும் அணிகள் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யவே அதிக வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருக்க வாய்ப்புகள் உள்ளதால், ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளரை கூட கொண்டு செல்லலாம்.

போட்டி நடக்கும் நாட்களில் விசாகப்பட்டினம் மைதானத்தைச் சுற்றி 32-34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும். மேலும் போட்டியில் மூன்றாவது நாளில் மழைக்கான வாய்ப்புகள் கொஞ்சம் உண்டு. ஆனால் இந்த போட்டி மழையால் பெரிய அளவில் பாதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.