“இது 2021 கிடையாது.. மோசமான ஸ்பின் பிட்ச் கூட போடுங்க” – இங்கிலாந்து விக்கெட் கீப்பர் சவால்

0
81
Foakes

கடந்த 12 ஆண்டுகளாக இந்திய அணி உள்நாட்டில் டெஸ்ட் தொடரை இழக்காமல் இருந்து வருகிறது. ஆனால் 12 வருடங்களுக்கு முன்பு இந்திய அணி டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணியிடமே இழந்து இருந்தது.

இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு ஜோ ரூட் தலைமையில் இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருந்தது.

- Advertisement -

அந்தத் தொடரின் முதல் போட்டியில் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு பெரிய சாதகங்களை கொடுக்கவில்லை. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் அடிக்க இந்திய அணி படுதோல்வி அடைந்தது. ஆண்டர்சன் ரிவர்ஸ் ஸ்விங் பந்து வீச்சில் அசத்தினார்.

இந்த நிலையில் தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாட இந்தியா வந்திருக்கும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியை அபாரமாகச் செயல்பட்டு வென்று இருக்கிறது.

இதன் காரணமாக இந்திய அணி 2021 போல இரண்டாவது போட்டிக்கு பந்து நிறைய திரும்பும் அளவிற்கான ரேங்க் டர்னர் ஆடுகளங்களை உருவாக்கும் என்று வெளியில் பேச்சு பரவலாக இருந்து வருகிறது.

- Advertisement -

ஆனால் முன்பு இருந்த இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கும் இப்போது இருக்கின்ற இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கும், போட்டியை அணுகுகின்ற முறை வித்தியாசமாக இருக்கிறது. இந்த வித்தியாசம் இங்கிலாந்து அணிக்கு ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தாலும் பாதிக்காது என்று அந்த அணியின் விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது ” 2021 முதல் டெஸ்ட் போட்டி பிளாட் விக்கெட்டில் விளையாடப்பட்டது. பின்னர் அவர்கள் பொங்கி எழுந்து ரேங்க் டர்னர் விக்கெட்டுக்கு சென்றார்கள். அதற்கு பிறகு நடைபெற்ற மூன்று போட்டிகள் நான் விளையாடுவதிலேயே மோசமான ஆடுகளங்களைக் கொண்டிருந்தது.

இது எப்படி போட்டியில் செல்வது என்பது பற்றி மனநிலை மாற்றம் ஆகும். நாங்கள் அடுத்து ஆடுகளம் எப்படி அமைந்தாலும் போட்டியை எதிர்கொள்வதற்கு மனரீதியாக தயாராகி விட்டோம். இப்படியான ஆடுகளங்களில் பந்துவீச்சாளர்கள் அணியை வெற்றி பெற வைப்பதில் முக்கிய இடத்தை பெறுவார்கள்.

இதையும் படிங்க : ரோகித் சர்மா இடத்தில் கேப்டனாக இவர் இருந்தால் இந்தியா தோற்றுருக்காது.. மைக்கேல் வாகன் பேச்சு

முன்பு ஆட்டம் இழந்து விடுவோம் என்கின்ற பயம் இருந்தது. ஆனால் இப்போது அப்படி எதுவும் கிடையாது. இப்படியான ஆடுகளங்களில் நீங்கள் ஆட்டம் இழப்பது சகஜமான ஒன்று என்கின்ற புரிதல் வந்துவிட்டது. எனவே இதை பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு சில நேரங்களில் நீங்கள் பேட்டிங்கில் ஆதிக்கமும் செலுத்தலாம்” என்று கூறி இருக்கிறார்.