“டிராவிட்டே சொன்ன பிறகு அது எப்படி பொய்யா இருக்கும்” – ஏபி.டிவில்லியர்ஸ் பேச்சு

0
420
Dravid

நாளை மறுநாள் இங்கிலாந்து இந்திய அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் துவங்குகிறது. முதல் போட்டியில் தோற்ற காரணத்தினால் இந்திய அணியின் மீது நிறைய அழுத்தம் இருக்கிறது.

மேலும் முக்கிய வீரர்கள் காயத்தால் அணியை விட்டு விலகி இருப்பதும் விராட் கோலி மூன்றாவது போட்டியில் தான் அணிக்கு திரும்புவார் என்பதும் ரோஹித் சர்மாவுக்கு பெரிய நெருக்கடியை ஒன்று செய்திருக்கிறது.

- Advertisement -

கேஎல்.ராகுல் இடத்திற்கு ரஜத் பட்டிதார் இல்லை சர்பராஸ் கான் இருவரில் ஒருவர் அறிமுகம் ஆவது உறுதி. ஜடேஜா இடத்திற்கு குல்தீப் யாதவ் விளையாடுவார். மேலும் சிராஜ் விளையாடுவாரா இல்லை அவரது இடத்தில் வாஷிங்டன் சுந்தர், ஒரு முழுமையான பேட்ஸ்மேன் யாராவது இடம் பெறுவார்களா என்று போட்டி நாளில்தான் தெரியும்.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்தி கடைசி நாளில் ஒட்டுமொத்தமாக போட்டியை இழந்தது இந்திய கிரிக்கெட் வீரர்களின் நம்பிக்கையை குறைத்திருக்கும்.

இந்திய அணியின் பேட்டிங்கில் போப் மற்றும் பந்துவீச்சில் டாம் ஹார்ட்லி இருவருமே இரண்டாவது இன்னிங்ஸில் திரும்ப வந்து இங்கிலாந்து பக்கம் ஆட்டத்தைக் கொண்டு சென்றார்கள். இதில் போப் பேட்டிங் செய்த விதத்தை ராகுல் டிராவிட் மனம் திறந்து பாராட்டி இருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து பேசி உள்ள ஏபி.டிவில்லியர்ஸ் கூறும்பொழுது “இந்த டெஸ்ட் போட்டியின் நாயகன் போப்தான். ராகுல் டிராவிட் இதை வெளிப்படையாக வந்து பேசும் பொழுது சிறப்பான ஒன்றாக அது இருந்தது. அவர் போப் பற்றி பாராட்டி இருந்தது முழுக்க உண்மை.

இதையும் படிங்க : “ரஜத் பட்டிதார் சர்பராஸ் கான் யாருக்கு வாய்ப்பு?” – இந்தியா பேட்டிங் பயிற்சியாளர் பரபரப்பு பேட்டி

நான் ஏறக்குறைய ஒவ்வொரு பந்தையும் அவர் விளையாடுவதை பார்த்தேன். உலகின் தலைசிறந்த சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக, இந்திய சூழ்நிலையில் அவர் பேட்டிங் செய்த விதம் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக இருந்தது. ஆனால் அவர் மிகவும் அமைதியாகவும், ஆட்டத்திற்குள் இருந்தும் விளையாடி அசத்தினார்” என்று கூறியிருக்கிறார்.