இருவரும் 181 ரன்கள்.. கோலியை விட்டு ரியான் பராக்கிற்கு மட்டும் கொடுக்கப்பட்ட ஆரஞ்சு கேப்.. காரணம் என்ன.?

0
2993
Riyan Parag and Kohli

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் 54 ரன்கள் குவித்த ரியான் பராக் ஐபிஎல் தொடரில் 181 ரன்கள் குவித்து விராட் கோலி உடன் முதல் இடத்தில் இணைந்து இருக்கிறார். இருப்பினும் ஆரஞ்சு தொப்பி ஏன் இவருக்கு வழங்கப்பட்டது என்று ரசிகர்கள் சந்தேகத்தில் உள்ளனர்.

மும்பை அணியின் சொந்த மைதானமான வாங்கடேவில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. ட்ரெண்ட் போல்டின் வேகத்தில் மும்பை அணியின் முதல் மூன்று விக்கெட்டுகள் சரிய, அதன் பிறகு ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா ஆகியோர் மும்பை அணியை சரிவிலிருந்து மீட்க முயற்சி செய்தனர். இருப்பினும் இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைத்து விளையாட முடியவில்லை.

- Advertisement -

கேப்டன் ஹர்திக் பாண்டியா 34 ரன்களில் ஆட்டம் இழக்க அதன் கிரகத்தில் வர்மாவும் 32 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதன் பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால், மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் குவித்தது. பின்னர் 126 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது.

மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அழுத்தம் கொடுத்து ராஜஸ்தான் அணியின் முக்கிய மூன்று விக்கெட்டுகளை விரைவிலேயே வீழ்த்தினார். நடப்பு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் இளம் வீரர் ரியான் பராக் இந்த போட்டியில் நிலைத்து நின்று விட்டார். அவருக்கு பக்கபலமாக அஸ்வின் 16 ரன்கள் குவித்து வெளியேற, ஒரு முனையில் நிலைத்து நின்ற ரியான் பராக் 39 பந்துகளில் 54 ரன்கள் குவித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. தொடர் மூன்று தோல்விகளை சந்தித்து இருக்கிற மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்தில் நீடிக்கிறது.எனவே இப்போட்டியின் மூலம் 54 ரன்கள் குவித்த ரியான் பராக் ஐபிஎல் தொடரில் 181 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் விராட் கோலி உடன் முதலிடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

ரியான் பராக்கிற்கு கிடைத்த ஆரஞ்சு கேப்

இருவரும் ஒரே ரன்களை அடித்திருந்தாலும் ஆரஞ்சு தொப்பி மட்டும் ஏன் இவருக்கு வழங்கப்பட்டது என்று கேள்வி எழுந்த நிலையில், மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள ரியான் பராகின் ஸ்ட்ரைக் ரேட் 160.17 ஆகும். இந்திய ஜாம்பவான் விராட் கோலி ஸ்ட்ரைக் ரேட் 141.40 ஆகும். இதன் அடிப்படையிலேயே ரியான் பராக்கிற்கு ஆரஞ்சு தொப்பி தற்போது வழங்கப்பட்டு இருக்கிறது.

இதையும் படிங்க: சிஎஸ்கே அறிமுக வீரர் ரச்சின் விக்கெட்.. கோபமாக வழி அனுப்பிய கோலி.. நடந்தது என்ன.?

இது தற்போதைய நிலைமை மட்டுமே.பின்னாளில் மாறுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உண்டு. மேலும் இந்த இரண்டு வீரர்களும் அரை சதங்கள் அடித்துள்ளனர். ரியான்பராக் இதுவரை 12 சிக்ஸர்களும், விராட் கோலி இதுவரை 7 சிக்சர்களும் விளாசி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.