வெறும் 1 மேட்ச்.. லீக் சுற்றில் ஒரே ஒரு போட்டியில் மோதும் சென்னை மும்பை அணிகள்.. காரணம் என்ன.?

0
10926

17வது ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. “எல் கிளாஸ்கோ” என்று அழைக்கப்படும் இப்போட்டியில் இந்த இரண்டு அணிகளுக்குமே வலுவான ரசிகர் பட்டாளம் இருப்பதால் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இப்போட்டி நடைபெறுகிறது.

ஐபிஎல் தொடரை பொறுத்தவரை பெரும்பாலும் ஒரு அணி மற்ற அணியுடன் இரண்டு முறை மோதுவது போலவே அட்டவணை அமைக்கப்பட்டிருக்கும். இது கடந்த 2021ஆம் ஆண்டு வரை இந்த நடைமுறையிலேயே போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது. 2021ஆம் ஆண்டு வரை ஐபிஎல்லில் எட்டு அணிகள் மட்டுமே பங்கேற்றன.

- Advertisement -

ஆனால் 2022ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகளின் வருகையால் எட்டு அணிகள் பத்து அணிகளாக உயர்த்தப்பட்டது. பத்து அணிகளுமே மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை போதுமானால் போட்டிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு நாட்களும் அதிகரிக்கும்.

இதனால் 2023ஆம் ஆண்டு முதல்  10 அணிகளுமே இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த அட்டவணைப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணி உடன் ஒரு முறை மட்டுமே மோதுவது போல அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் 2022ம் ஆண்டுக்கு முன்பாக ஐபிஎல் இன் தொடக்கத்தில் பத்து அணிகள் விளையாடின. அப்போது இந்த நடைமுறை கடைபிடிக்கப்படவில்லை.

எனவே இந்த இரண்டு குழுவாக பிரிக்கப்பட்ட அட்டவணையில்  குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுடன் சென்னை அணி பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த அணிகளுடன்  இரண்டு முறை சென்னை அணி மோதும்.

- Advertisement -

ஏ பிரிவில் டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் லக்னோ அணியுடன் மட்டுமே சென்னை அணி இரண்டு முறை மோதுகிறது. மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மட்டுமே மோதுகிறது. இதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒருமுறை மட்டுமே மோதும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டிருக்கும்.

இதையும் படிங்க: நீக்கப்பட்ட ரோகித்.. சிஎஸ்கே செய்த செயல்.. மும்பை இவங்களை பார்த்து கத்துக்கோங்க.. ரோகித் ரசிகர்கள் நெகிழ்ச்சி

எனவே பங்காளியான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஒரு முறை மட்டுமே மோதுவதால், இது சென்னை ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது என்றுதான் கூற வேண்டும். இதனால் இப்போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த முறை இரண்டு புதிய கேப்டன்களுடன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருத்ராட்ச் கேப்டனாகவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும் செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.