நீக்கப்பட்ட ரோகித்.. சிஎஸ்கே செய்த செயல்.. மும்பை இவங்களை பார்த்து கத்துக்கோங்க.. ரோகித் ரசிகர்கள் நெகிழ்ச்சி

0
28234

ஐபிஎல் தொடரில் சென்னை – மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் எல் கிளாசிக்கோ என்று கொண்டாடப்படும். கடைசி நிமிடம் வரை வெற்றி யாருக்கு என்பது தெரியாமல் ரசிகர்கள் பரபரப்புடன் காத்திருக்கும் போட்டியாக இருக்கும். இவர்களின் போட்டியை பார்க்கவே ஏராளமான ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள்.

அதற்கு மும்பை – சிஎஸ்கே அணிகளின் வரலாறே காரணம். ஏனென்றால் சிஎஸ்கே அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்தியது முதல் சிஎஸ்கே அணிக்கு நிகரான கோப்பையை வென்றது வரை மும்பை அணி சம்பவங்கள் ஏராளம். அதற்கு மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மிகமுக்கியமான காரணம்.

- Advertisement -

10 ஆண்டுகளாக ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்று 5 முறை ஐபிஎல் கோப்பையை அந்த அணிக்கு வென்று கொடுத்துள்ளார். என்னதான் பேட்டிங்கில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் கேப்டன்சியை ரோகித் சர்மா ஒருபோதும் சோடை போனதில்லை. இருக்கும் வீரர்களை வைத்து வெற்றிக்காக முயற்சிப்பார் ரோகித் சர்மா.

இந்த நிலையில் மும்பை அணியின் கேப்டன்சி பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது மும்பை அணி மற்றும் ரோகித் சர்மா ரசிகர்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ரோகித் சர்மா கேப்டன்சியில் இருந்து நீக்கப்பட்ட சூழலில், சிஎஸ்கே அணி தரப்பில் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கே.ஜி.எஃப் படத்தின் கிளைமேக்ஸ் பிஜிஎம் பின்னணியில் ஒலிக்க, தோனி – ரோகித் சர்மா இணைந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் அடுத்தடுத்து வருவது போல் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.

- Advertisement -

பரம எதிரியான சிஎஸ்கே அணி நிர்வாகமே ரோகித் சர்மாவுக்கு வீடியோ வெளியிட்டுள்ள நிலையில், மும்பை அணி நிர்வாகம் ரோகித் சர்மா முதுகில் குத்தியதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனால் சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் இருந்து ஜாம்பவான் வீரர்களை எப்படி மதிக்க வேண்டும் என்று மும்பை அணி நிர்வாகம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கருத்து கூறி வருகின்றனர்.