பும்ரா பவுலிங் விளையாடுவதை வெறுக்கிறேன்.. ஜோ ரூட்டாலே முடியல” ஸ்டூவர்ட் பிராட் கருத்து

0
517
Bumrah

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தின் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கிறது.

இந்த ஆடுகளத்தில் ஜெய்ஸ்வால் தவிர மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுப்பான முறையில் விளையாடாத காரணத்தினால் இந்திய அணி 396 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதில் ஜெய்ஸ்வால் மட்டுமே 209 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் தனது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 114 ரன்களுக்கு ஒரு விக்கெட் மட்டுமே இழந்திருந்தது. வலிமையான இந்த இடத்தில் இருந்து இங்கிலாந்து அணியை 253 ரன்களுக்கு இந்திய அணி கட்டுப்படுத்தியது.

இதற்கு மிக முக்கிய காரணமாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பரித் பும்ரா இருந்தார். 15.5 ஓவர்களில் 45 ரன்கள் மட்டுமே விட்டு தந்து ஆறு விக்கெட் கைப்பற்றி இங்கிலாந்து அணியை ஒட்டுமொத்தமாக சரித்தார். இதன் காரணமாக இந்திய அணி திரும்ப போட்டிக்குள் வந்திருக்கிறது.

பும்ரா பந்துவீச்சு குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கூறும் பொழுது “ஜோ ரூட் போன்ற ஒரு திறமையான நல்ல பேட்ஸ்மேன் ஒரு பந்துவீச்சாளருக்கு எதிராக தொடர்ச்சியாகத் தடுமாறினால், எந்த ஒரு பேட்ஸ்மேன் அந்த குறிப்பிட்ட பந்துவீச்சாளருக்கு எதிராக தடுமாறுவார்கள் என்று தைரியமாக பந்தயம் கட்டலாம்.

- Advertisement -

அவர் ஒரு தனித்துவமான அதிரடியை வைத்திருக்கிறார். அவருடன் இருக்கும் பொழுது இந்திய அணி சிறந்த அணி என்பதில் சந்தேகம் கிடையாது. அவர் ஒரு அபாரமான டி20 பந்துவீச்சாளர். ஆனால் இருபது ரன் சராசரியில் 152 விக்கெட்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்திருக்கிறார் என்றால், அவரது புள்ளிவிபரப்படி அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் மிகச் சிறந்த பந்துவீச்சாளர்.

இதையும் படிங்க : சுப்மன் கில் அதிரடி சதம்.. இந்திய அணி முன்னணி.. இங்கிலாந்து அணியின் நம்பிக்கை குறைகிறது

பும்ராவை எதிர்கொள்வது உலகத்தில் யாரையும் எதிர்கொள்வது போன்றது கிடையாது. அவரை எதிர் கொள்வதை நான் வெறுக்கிறேன். லசீத் மலிங்கா பந்துவீச்சில் இருப்பது போல இவருக்கும் ஒரு விளையாடமுடியாத விஷயம் இருக்கிறது. இவரை பேட்ஸ்மேன் எடுத்து விளையாடுவது கடினம்” என்று கூறியிருக்கிறார்