நான் நேத்து ஆக்ரோஷமா நடந்துகிட்டேன்.. அதுக்கு காரணம் இதுதான் – ஹர்ஷித் ராணா பேச்சு

0
724
Rana

ஐபிஎல் 17ஆவது சீசன் நேற்று இரண்டாவது நாளிலேயே மிகவும் பரபரப்பாக மாற ஆரம்பித்திருக்கிறது. நேற்று கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி, 40 ஓவர்களும் முழுமையாக நடைபெற்றது. மேலும் கடைசி பந்து வரை வெற்றிக்கான வாய்ப்பு இரு அணிகளுக்கும் இருந்தது. இதில் கொல்கத்தா இளம் வேதப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா வெற்றியை தமது அணியின் பக்கம் திருப்பினார்.

22 வயதான வலதுகை வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா டெல்லி மாநில அணிக்காக விளையாடி வருகிறார். இயல்பாகவே இவர் களத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளக் கூடிய வீரராக இருக்கிறார். வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை தொடரில் கூட வம்பு இழுத்த பங்களாதேஷ் வீரர்களுக்கு களத்தில் சரியான பதிலடி கொடுத்திருந்தார். அந்த நேரத்தில் இவருடைய செயலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

- Advertisement -

ஆனால் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் விக்கெட்டை கைப்பற்றிய பொழுது, அவரது முகத்திற்கு நேராக சென்று பறக்கும் முத்தம் கொடுத்து வழி அனுப்பி வைத்தார். அவருடைய இந்த கொண்டாட்டம் நேற்று பெரிய சலசலப்பை உருவாக்கியது. வர்ணனையிலிருந்து கவாஸ்கர் இதைக் கண்டித்து இருந்தார். மூத்த இந்திய வீரரை இளம் இந்திய வீரர் இப்படி நடத்துவது சரியில்லை என்று கூறப்பட்டது.

இதற்கடுத்து ஆட்டத்தின் உச்சகட்ட பரபரப்பு நிலவிய இருபதாவது ஓவரில் ஹென்றி கிளாஸ் விக்கெட்டை கைப்பற்றிய ஹர்ஷித் ராணா, அவரை மைதானத்தை விட்டு வெளியேறும்படி ஆக்ரோஷமாக சைகை செய்தார். இதனால் கோபமடைந்த ஹென்றி கிளாசன் ஏதோ கூற, கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். நேற்றைய போட்டியில் கொல்கத்தா தரப்பில் ஹர்ஷித் ராணா கதாநாயகன் ஆனபோதிலும், அவருடைய செயல்பாடு விமர்சனத்துக்குரிய வகையில் இருந்தது.

இந்த நிலையில் நேற்றைய போட்டியில் என்ன நடந்தது என்பது குறித்து மேலோட்டமாக பேசியிருக்கும் ஹர்ஷித் ராணா தமது பெற்றோர்களை வரவழைத்தது குறித்து கூறியிருக்கிறார். இதுகுறித்து ஹர்ஷித் ராணா கூறும்பொழுது ” இதுவரையில் என்னுடைய பெற்றோர்கள் நான் விளையாடும் போட்டிகளை பார்ப்பதற்காக நேரில் வந்ததே கிடையாது. ஒருவேளை அவர்கள் என் போட்டியை பார்ப்பதற்கு வந்தால், நான் மிகவும் மோசமாக விளையாடுவேன் என்று நினைத்திருந்தேன்.

- Advertisement -

இதையும் படிங்க : தம்பி எல்லை மீறி ஓவரா பண்ற.. ஹர்சித் ராணாவுக்கு அதிரடியாக தண்டனை கொடுத்த ஐபிஎல் குழு

இந்த ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் நான் விளையாடுகிறேன். எனவே இந்தப் போட்டியில் நான் எப்படி செயல்படுகிறேன் என்று என் பெற்றோருக்கு நான் காட்ட விரும்பினேன். இதன் காரணமாக அவர்களை முதல் போட்டியை பார்ப்பதற்காக வரவழைத்தேன். கடைசி ஓவரை வீசும் போது இதயத்துடிப்பு மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால் ரசிகர்கள் என் மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். மேலும் எங்களுக்கு கடைசி ஓவருக்கு அதிக ரன்களும் இல்லை” என்று கூறி இருக்கிறார்.