ஐபிஎல் தொடரில் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டி, பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சொர்க்கமான ஆடுகளத்தில் நடத்தப்பட்டது. நேற்றைய போட்டியில் இரு தரப்பில் இருந்தும் சிக்சர் மழை பொழிந்தது. கடைசிப் பந்து வரை நீண்ட இந்த போட்டி இரு அணி ரசிகர்களுக்குமே விருந்தாக அமைந்திருந்தது.
இந்தப் போட்டியில் ஒட்டுமொத்தமாக 39 ஓவர்கள் வரையில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தினாலும் கூட, போட்டியின் நாற்பதாவது ஓவர் முழுக்க முழுக்க பந்துவீச்சாளர்கானதாக இருந்தது. குறிப்பிட்ட அந்த ஓவரை வீசிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் 22 வயதான இளம் வேகப்பந்துவீச்சாளர் ஹர்சித் ராணா ஹீரோ ஆனார்.
நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டபோது, ஹர்சித் ராணா வீசிய அந்த ஓவரின் முதல் பந்திலேயே ஹென்றி கிளாசன் அடித்தார். மேற்கொண்டு ஐந்து பந்துகளுக்கு ஏழு ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்திய உள்நாட்டு இளம் வேகபந்து வீச்சாளர் ஹர்சித் ராணா மேற்கொண்டு ஐந்து பந்துகளில் இரண்டு ரன்கள் மட்டுமே தந்து, ஷாபாஷ் அகமத் மற்றும் அபாயகரமான ஹென்றி கிளாசன் என இரண்டு முக்கிய விக்கெட்டுகளையும் கைப்பற்றி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெல்ல வைத்தார்.
ஹர்சித் ராணாவுக்கு அபராதம்
இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சில் மிகவும் ஆக்ரோஷமாக களத்தில் காணப்பட்ட ஹர்சித் ராணா மூத்த வீரரான மயங்க் அகர்வாலை பறக்கும் முத்தம் கொடுத்து வெளியே அனுப்பி வைத்தார். அடுத்து ஹென்றி கிளாசன் விக்கெட்டை கைப்பற்றிய பொழுது கையை நீட்டி வெளியே போ என்பது போல சைகை செய்தார்.
இது அப்போது ஆங்கில வர்ணனையில் இருந்த சுனில் கவாஸ்கரை கோபமடைய வைத்தது. அவர் இளம் வீரரின் இப்படியான செய்கைகளை கண்டித்தார். ஹர்ஷித் ராணா திறமையான வீரராக இருந்த போதும், உள்நாட்டு கிரிக்கெட்டில் பந்துவீச்சில் மட்டும் இல்லாமல் பேட்டிங்கிலும் சிவப்பு பந்தில் சதம் அடித்துவேகமாக வளர்ந்து வந்தாலும், அவர் ஆக்ரோஷமாக இருப்பது சில பிரச்சனைகளை களத்தில் உண்டு செய்து விடுகிறது.
தற்பொழுது அவருக்கு அபராதம் விதித்திருக்கும் ஐபிஎல் குழு அறிக்கையில் “கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் ஹர்சித் ராணா, மார்ச் 23ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது, ஐபிஎல் நடைமுறை விதிகளை மீறியதற்காக அவரது போட்டி கட்டணத்தில் இருந்து 60% அபராதம் விதிக்கப்படுகிறது.
இதையும் படிங்க : இனி நான்தான்.. கிறிஸ் கெயில் ரோகித் சர்மாவை தாண்டி ரசல் மெகா ஐபிஎல் ரெக்கார்டு
அவர் லெவல் இரண்டு வகை குற்றங்களை செய்திருக்கிறார். ஒரு குற்றத்திற்கு போட்டி கட்டணத்திலிருந்து 50% இன்னொரு குற்றத்திற்கு 10% அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதோடு, ஆட்ட நடுவர் கூறியதையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். மேலும் எல்லாம் மேட்ச் ரெப்ரி இறுதி முடிவுக்கு உட்பட்டது” என்று கூறப்பட்டிருக்கிறது.