இனி நான்தான்.. கிறிஸ் கெயில் ரோகித் சர்மாவை தாண்டி ரசல் மெகா ஐபிஎல் ரெக்கார்டு

0
215
Russell

நேற்று ஐபிஎல் 17வது சீசனின் இரண்டாவது நாளில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி, ஹை ஸ்கோரிங் திரில்லராக ரசிகர்களுக்கு இருந்தது. இரண்டு அணிகளுமே 200 ரன்களை தாண்டியதோடு, போட்டி கடைசிப் பந்து வரை சென்றது.

டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு ரசல் அதிரடியில் வெறும் 25 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்கள் உடன் 64 ரன்கள் குவித்தார். இதன் காரணமாக அந்த அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 208 ரன்கள் குவித்தது.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய ஹைதராபாத் அணிக்கு ஹென்றி கிளாசன் பேட்டிங்கில் மிரட்டினார். அவர் பவுண்டரிகள் ஏதும் அடிக்காமல் எட்டு சிக்ஸர்களுடன் 27 பந்தில் 63 ரன்கள் எடுத்தார். நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் சிக்ஸர் மழையாக இருந்தது. கடைசியில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது.

தொடர்ந்து ஆதரித்த கொல்கத்தா

இந்த முறை ஐபிஎல்மெகா ஏலத்தின் போதே கொல்கத்தா அணியில் இருந்து ரசல் கழட்டிவிடப்படுவார் என்று பலராலும் வெளியில் பேசப்பட்டது. ஆனால் அந்த அணி நிர்வாகம் தொடர்ந்து அவரை நம்பி அணியில் வாய்ப்பு கொடுத்தது. ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கூட அவர் சிறப்பாக செயல்படவில்லை. அவருடைய இடத்தில் ரிங்கு சிங்தான் சிறப்பாக விளையாடினார்.

- Advertisement -

இப்படி இருந்த போதும் கூட கொல்கத்தா அணி அவரை தொடர்ந்து ஆதரித்து வந்தது. நேற்று அவரை மாதிரியான ஒரு வீரரை ஏன் அணியில் வைத்திருக்க வேண்டும் எனக் காட்டினார். மிகவும் முக்கியமான நேரத்தில் வெறும் இருபது பந்துகளில் 50 ரன்கள் தாண்டி, 25 ரன்கள் அவர் குவித்ததால்தான் கொல்கத்தா அணி 200 ரன்களை தாண்டியது.

நேற்றைய போட்டியில் ஐபிஎல் தொடரில் சிக்ஸர்கள் அடிப்பதில் ரசல் ஒரு மெகா ஐபிஎல் சாதனையை படைத்திருக்கிறார். அவர் நேற்று புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்த பொழுது குறைந்த பந்தில் 200 சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை, சக நாட்டவரான கிறிஸ் கெயிலை முந்தி படைத்தார்.

இதையும் படிங்க : ஸ்டார்க் வீசும் 3 பந்தின் சம்பளம்.. ஹர்ஷித் ராணாவின் மொத்த ஐபிஎல் சம்பளம் – சுவாரசிய தகவல்

குறைந்த பந்துகளில் 200 சிக்சர் அடித்த வீரர்கள்:

ஆன்ட்ரே ரசல் – 1322
கிறிஸ் கெய்ல் – 1811
கீரன் பொல்லார்ட் – 2055
ஏபி டி வில்லியர்ஸ் – 2790
எம்எஸ் தோனி – 3126
ரோஹித் சர்மா – 3798

- Advertisement -