“ஆண்டர்சன் வாய்ப்பேச்சில் இந்திய வீரரிடம் மோத இனி வாய்ப்பே இல்லை.. வருத்தமா இருக்கு” – நாசர் ஹுசைன் கருத்து

0
2558
Hussain

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு இந்திய தேர்வுக்குழு முதல் இரண்டு போட்டிகளுக்கு மட்டுமே அணியை அறிவித்தது.

இந்த நிலையில் இரண்டு போட்டிகளும் முடிவடைந்து விட்ட நிலையில் இன்னும் மூன்றாவது போட்டிக்கு அணியை அறிவிக்காமல் தாமதப்படுத்தி வருகிறது. மேலும் இந்திய அணியில் இரண்டாவது போட்டியில் காயம் காரணமாக விளையாடாத கேஎல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரின் காயங்களை தேர்வுக்குழு கண்காணித்து வருகிறது என்பதாக தெரிகிறது.

- Advertisement -

அதே சமயத்தில் விராட் கோலி இதுவரையில் இந்திய அணி நிர்வாகத்திடம் எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு அணியை தேர்வு செய்வதில் தேர்வுக்குழு தடுமாறி வருகிறது.

இதுகுறித்து கருத்து கூறியுள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் ” விராட் கோலி விளையாடாதது இந்திய அணிக்கு மட்டும் அல்லாமல் உலகக் கிரிக்கெட்டுக்கு பெரிய இழப்பு ஆகும். ஆனால் இங்கு விராட் கோலியின் தனிப்பட்ட வாழ்க்கைக்குதான் முதலில் முக்கியத்துவம் தர வேண்டும். அவர் இல்லாதது இந்திய அணிக்கு ஒரு பெரிய அடியாக இருக்கும். அவர்கள் சில இளம் பேட்ஸ்மேன்களை தேர்வு செய்து இருக்கிறார்கள்.

ஆனால் கடைசி சில மாதங்களாக இந்திய அணிக்கு கேஎல்.ராகுல் மிகச் சிறப்பாக விளையாடியிருக்கிறார். அவருடைய காயம் சரியாகி இந்திய அணியில் இணைவார் என்று நான் நினைக்கிறேன். அவர் வரும்பொழுது இந்திய அணியின் பேட்டிங் யூனிட் பலமடையும்.

- Advertisement -

விராட் கோலி 15 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச கிரிக்கெட் விளையாடி வருகிறார். இதனால் குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்பி விளையாட்டில் இருந்து தள்ளி இருக்க நினைத்தால், நிச்சயம் அவர் அதைச் செய்ய வேண்டும். விராட்கோலிக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்.

அதே சமயத்தில் நாம் பல ஆண்டுகளாக பார்த்து வந்த ஜிம்மி ஆண்டர்சன் மற்றும் விராட் கோலிக்கு இடையிலான வாய் தகராறுகளை இனி நாம் பார்க்க முடியாது என்று அர்த்தம். இருந்தாலும் பரவாயில்லை இருக்கட்டும்” என்று கூறி இருக்கிறார்.