சிஎஸ்கே ஜெயிக்கல.. ஜெயிக்க வச்சாங்க.. அங்க நடந்தது இதுதான் – கவாஸ்கர் அதிரடி பேட்டி

0
231
Gavaskar

மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சொந்த மைதானத்தில் அடைந்த தோல்வி பல விமர்சனங்களை உருவாக்கி வருகிறது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் முடிவுகளை சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

மும்பை வான்கடே மைதானத்தை பொருத்தவரையில் இரவு போட்டியில், ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் பனிப்பொழிவு இருக்கும். எனவே டாஸ் வென்றால் பந்து வீசும் அணி வெற்றி பெறுவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் உண்டு. ஆனால் நேற்று மும்பை டாஸ் வென்று பந்து வீசியும் தோல்வி அடைந்தது.

- Advertisement -

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி 190 ரண்களுக்குள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கட்டுப்படுத்தும் நிலைமையில் இருந்து, மேற்கொண்டு 206 ரன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுக்கும் அளவிற்கு விட்டுத் தந்தது. இது அந்த அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. கடைசி ஓவரில் தோனிக்கு ஹர்திக் பாண்டியா தனது பந்துவீச்சில் 20 ரன்கள் விட்டு தந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிவம் துபே பேட்டிங் வந்ததுமே அவருக்கு சுழல் பந்துவீச்சாளரை கொண்டு ஒரு ஓவர் கூட வீசாதது, ஹர்திக் பாண்டியா கேப்டன்சி பலவீனத்தை வெளிப்படுத்தியது. அவர் மிகவும் தற்காப்பான கேப்டன்சி செய்து ஆட்டத்தை தோற்று விட்டார் என்று கூறப்படுகிறது. அப்படி ஒரு ஓவர் சுழல் பந்துவீச்சாளர் வீசி இருந்தால் கூட, ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரை வீசும் நிலை ஏற்பட்டு இருக்காது.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா கேப்டன்சி மற்றும் பந்துவீச்சு குறித்து பேசி உள்ள சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது ” ஒரு சிக்ஸர் கொடுத்தது பரவாயில்லை. ஆனால் ஹர்திக் பாண்டியா மீண்டும் ஒரு லென்த் பந்தை வீசுகிறார். கடைசி நேரத்தில் ஒரு பேட்ஸ்மேன் அப்படியான ஒரு லென்த் பந்தைதான் தேடிக் கொண்டிருப்பார். இரண்டாவது சிக்ஸர் கொடுத்த பின்பு, இன்னும் அடிப்பதற்கு வசதியாக லெக் சைடில் புல்டாஸ் பந்து போடுகிறார். அந்தப் பந்தும் சிக்ஸருக்கு பறக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : தோனிதான் மும்பை இந்தியன்ஸை மன அழுத்தத்துக்கு கொண்டு போனாரு.. ஆச்சரியமான மனுஷன் – சிஎஸ்கே பவுலிங் கோச் பேட்டி

ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சு முற்றிலும் சாதாரணமான பந்துவீச்சு. மேலும் அவரது கேப்டன்சி மிகவும் சாதாரணமான கேப்டன்சி. நேற்று சிஎஸ்கே அணியை பந்துவீச்சில் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். ருத்ராஜ் மற்றும் சிவம் துபே இருவரும் சிறப்பாக விளையாடினால் கூட, அந்த அணியை 185 முதல் 190 ரன்கள் எடுக்கும் நிலையில்தான் இருந்தது. இந்த இடத்தில் தான் கட்டுப்படுத்த வேண்டியதை மும்பை இந்தியன்ஸ் தவற விட்டது” என்று கூறி இருக்கிறார்.