தோனிதான் மும்பை இந்தியன்ஸை மன அழுத்தத்துக்கு கொண்டு போனாரு.. ஆச்சரியமான மனுஷன் – சிஎஸ்கே பவுலிங் கோச் பேட்டி

0
99
Dhoni

ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி அவர்களது மைதானத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நான்கு பந்துகளை மட்டுமே சந்தித்த தோனி மூன்று சிக்ஸர்களுடன் 20 ரன்கள் எடுத்தார். இதுகுறித்து சிஎஸ்கே பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சிமன்ஸ் பேசியிருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடர் முழுக்கவே தோனி பேட்டிங் வரிசையில் மேலே வர வேண்டும் என ரசிகர்கள் மட்டும் இல்லாமல் சில முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் அழுத்தமான கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள். ஆனால் தோனியின் உடல்நிலை அதற்கு ஒத்துழைப்பு அளிக்கக்கூடிய வகையில் இல்லை என்பதுதான் உண்மை.

- Advertisement -

இந்த நிலையிலும் நேற்று தோனி நான்கு பந்துகள் மீதம் இருக்கும் போது மட்டுமே களத்திற்கு வந்தார். ஆனால் அட்டகாசமாக ஹட்ரிக் சிக்ஸர்கள் அடித்து நான்கு பந்தில் 500 ஸ்ட்ரைக் ரேட்டில் 20 ரன்கள் எடுத்து பிரமிப்பை ஏற்படுத்தினார். மேலும் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன் அணியை சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தான் வீழ்ந்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சிமன்ஸ் தோனி பேட்டிங் குறித்து கூறும் பொழுது ” இதில் முக்கியமானது என்னவென்றால், போட்டியின் முதல் பாதியில் ஆட்டம் முடிந்து செல்லும் பொழுது, எதிரணிக்கு உளவியல் ரீதியாக அழுத்தம் கொடுப்பதுதான். நேற்று தோனியின் பேட்டிங் தான் இருநூறு ரன்களுக்கு மேல் எங்கள் அணியை எடுத்துச் சென்றது. இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு உளவியல் ரீதியாக அழுத்தத்தை உண்டாக்கியது. அதே சமயத்தில் அவர் எங்களுக்காக விளையாடிய விதத்தில் எங்கள் அணி உத்வேகம் பெற்றது.

அவர் களத்திற்குள் சென்று அந்த முதல் பந்தை சிக்சர் அடித்த விதத்தில் அது முற்றிலும் விதிவிலக்கான ஒன்று. மேலும் வலைப் பயிற்சியில் அவர் தொடர்ந்து இதைத்தான் செய்து வருகிறார். மேலும் அவர் விளையாடுகின்ற விதம் நம்ப முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : எல்லாம் பொய்.. ஹர்திக் சந்தோசமா இருக்கிற மாதிரி நடிக்கிறார்.. நேர்ல பார்த்தேன் – கெவின் பீட்டர்சன் பேச்சு

நான் பார்த்த நம்ப முடியாத வீரர்களில் தோனியும் ஒருவர். அவர் களத்தில் காட்டும் அமைதி அபாரமானது. மேலும் நாங்கள் பந்துவீச்சில் ஏதாவது திட்டங்கள் தயாரித்தால், மகேந்திர சிங் தோனியை பேட்ஸ்மேனாக வைத்துதான் பரிசோதித்துப் பார்ப்போம். ஏனென்றால் அவர் எல்லா பந்துகளையும் அடிக்க முடியும். அவர்தான் எங்களுடைய பேட்டிங் டெம்ப்ளேட்” என்று கூறியிருக்கிறார்.