என்ன ஹர்திக் குஜராத்துல செஞ்சதை.. மும்பை போய் மறந்துட்டிங்க – முகமது சமி விமர்சனம்

0
566
Hardik

நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக குஜராத் அகமதாபாத் மைதானத்தில் மும்பை அணி ஆட்டத்தை 35 ஓவர்கள் வரையில் கையில் வைத்திருந்து. கடைசி ஐந்து ஓவர்களில் செய்த தவறால் போட்டியை தோற்று இருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியை விட்டு வந்தது, மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் பிரச்சனை ஆகியவற்றில் இருந்து தப்பிக்க கேப்டனாக ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு வெற்றி தேவைப்பட்டது.

இப்படியான நிலையில் வெல்ல வேண்டிய போட்டியை ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தோற்றதால், ஏற்கனவே அவர் மீது இருந்த விமர்சனங்கள் இன்னும் அதிகமாகி இருக்கிறது. மேலும் கடைசி ஐந்து ஓவர்களில் அவரே பேட்டிங் செய்ய வந்து, தேவையான ரன்னை அடிக்காமல் ஆட்டம் இழந்ததால் இந்த விமர்சனங்கள் இன்னும் இன்னும் அதிகமாகி இருக்கிறது.

- Advertisement -

குறிப்பாக நேற்று ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்வதற்கு ஏழாம் இடத்தில் வந்தார். அதே சமயத்தில் உள்ளே அனுப்பப்பட்ட டிம் டேவிட்டுக்கு திலக் வர்மா ரஷித் கான் ஓவரில் விளையாடுவதற்கு வாய்ப்பை கொடுக்க மறுத்தார். டிம் டேவிட் ரஷித் கான் பந்தை விளையாட மாட்டார் என்றால், ஹர்திக் பாண்டியா உள்ளே வந்திருக்க வேண்டும் என்கின்ற கருத்துகள் சமூக வலைதளத்தில் பலராலும் சொல்லப்பட்டு வருகிறது.

மேலும் நேற்று அணியில் முன்னணி பந்துவீச்சாளர்கள் இருந்தும் கூட, ஹர்திக் பாண்டியா பவர் பிளேவில் முதல் ஓவரை வீசியதோடு, மொத்தமாக சேர்த்து மூன்று ஓவர்கள் வீசி 30 ரன்கள் தந்தார். அவர் ஆடுகளத்தை புரிந்து அதற்கேற்ற வகையில் நேற்று பந்து வீசவில்லை. இதன் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆரம்பத்தில் கிடைத்த ரன்கள் பின்பு உதவியாக இருந்தது.

இதுகுறித்து அவருடன் குஜராத் டைட்டன்ஸ் அணியில் சேர்ந்து விளையாடிய முகமது சமி பேசும்பொழுது “பேட்டிங்கில் ரைட் லெப்ட் காம்பினேஷன் குறித்து எப்பொழுதும் பேசப்படுகிறது. இதேதான் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணி விளையாடிய போதும் நடந்தது. அப்பொழுது பேட் கம்மின்ஸ் கொஞ்சம் முன்கூட்டியே வந்திருக்க வேண்டும். கடைசி கட்டத்தில் ரன் எடுக்கும் பொறுப்பை மற்றவர்களிடம் கொடுப்பதற்கு தாமே முன்வந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : ஐபிஎல் 2024: மீதி 53 போட்டி அட்டவணை வெளியானது.. சிஎஸ்கே போட்டிகளின் முழு பட்டியல்

ஹர்திக்கை பொறுத்தவரை நீங்கள் குஜராத் அணிக்காக மூன்று மற்றும் நான்காம் இடங்களில் பேட்டிங் செய்திருக்கிறீர்கள். இப்படி இருக்கும் பொழுது மும்பைக்கு உங்களால் ஏன் பேட்டிங் செய்ய முடியவில்லை அதில் என்ன சிரமம் இருக்கிறது? நேற்று நீங்கள் ஏழாவது இடத்தில் வந்தீர்கள். கிட்டத்தட்ட இது ஒரு டெய்ல்-என்டர். இதனால் உங்கள் மீது நீங்களே அழுத்தத்தை உருவாக்கி கொள்கிறீர்கள். நேற்று ஹர்திக் முன்கூட்டியே வந்திருந்தால் ஆட்டத்தின் முடிவு இப்படி இருந்திருக்காது” என்று கூறி இருக்கிறார்.