ஐபிஎல் 2024: மீதி 53 போட்டி அட்டவணை வெளியானது.. சிஎஸ்கே போட்டிகளின் முழு பட்டியல்

0
145
IPL

ஐபிஎல் 17வது சீசனுக்கு, முதல் பதினைந்து நாட்களுக்கான அட்டவணையை மட்டுமே பிசிசிஐ வெளியிட்டு இருந்தது. இந்தியாவில் பொதுத் தேர்தல் காலம் என்பதால், தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவித்த பிறகு, அதற்கேற்றபடி முழு அட்டவணையையும் வெளியிட திட்டமிட்டு இருந்தது. இந்த நிலையில் தேர்தல் தேதிகள் வெளிவந்து விட்டதால், தற்பொழுது முழு ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடைபெற்று முடிவுக்கு வருகிறது. இதன் காரணமாக இந்த முறை பிளே ஆப் சுற்றில் ஒரு போட்டியும் இறுதிப் போட்டியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தேர்தல் முன்பே முடிந்திருப்பதால் தமிழகத்தில் சிக்கல் இருக்காது என்கின்ற காரணத்தினால் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் சீசனின் பிளே ஆப் சுற்றின் முதல் தகுதிச் சுற்று போட்டி மே 21, எலிமினேட்டர் போட்டி மே 22 தேதிகளில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இரண்டாவது தகுதிச் சுற்று போட்டி மே 24ஆம் தேதியும், இறுதிப் போட்டி மே 26 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. டி20 உலக கோப்பை ஜூன் மாத ஆரம்பத்தில் துவங்க இருப்பதால், இந்த முறை இறுதிப்போட்டி சில நாட்கள் முன்னதாகவே நடத்தப்படுகிறது.

ஐபிஎல் தொடருக்கு மீதமுள்ள 53 போட்டிகளுக்கான முழு அட்டவணையும் வெளியாகிவிட்டது. இதில் பஞ்சாப் அணி தனது ஹோம் ஆட்டங்களில் இரண்டு ஆட்டங்களை தரம்சாலா மைதானத்தில் விளையாடுகிறது. இதேபோல் தற்பொழுது விசாகப்பட்டினத்தில் விளையாடும் டெல்லி அணி, தங்களுடைய ஐந்து ஹோம் ஆட்டங்களுக்கு டெல்லிக்கு திரும்புகிறது.

நாளை குஜராத் அணியையும் அதற்கு அடுத்து கொல்கத்தா அணியையும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே எதிர்த்து விளையாடுகிறது. இதற்கு அடுத்த இரண்டு போட்டிகளுக்கு மும்பை மற்றும் லக்னோவுக்கு சென்று அந்த அணிகளை எதிர் கொண்டு விளையாடுகிறது. இதற்கு அடுத்து சென்னை சேப்பாக்கத்திற்கு திரும்பும் சிஎஸ்கே அணி, தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களை சென்னையிலேயே விளையாடுகிறது. அட்டவணையில் இது சென்னை அணிக்கு மிகவும் சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : இலங்கை அணியின் முதல் டெஸ்ட் வெற்றி.. WTC புள்ளி பட்டியலில் இங்கிலாந்துக்கு பரிதாபம்.. முழு தகவல்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஐபிஎல் 2024 அட்டவணை :

கொல்கத்தாவுக்கு எதிராக ஏப்ரல் 8ம் தேதி சென்னை.
மும்பைக்கு எதிராக ஏப்ரல் 14ஆம் தேதி மும்பை.
லக்னாவுக்கு எதிராக ஏப்ரல் 19ஆம் தேதி லக்னோ
லக்னாவுக்கு எதிராக ஏப்ரல் 23ஆம் தேதி சென்னை.
ஹைதராபாத்துக்கு எதிராக ஏப்ரல் 28ஆம் தேதி சென்னை.
பஞ்சாபுக்கு எதிராக மே 1ஆம் தேதி சென்னை.
பஞ்சாப்புக்கு எதிராக ஏப்ரல் 5ஆம் தேதி தரம்சாலா மதியம் 3:30 மணி.
குஜராத்துக்கு எதிராக மே 10ஆம் தேதி அகமதாபாத்
ராஜஸ்தானுக்கு எதிராக மே 12ஆம் தேதி சென்னை மதியம் 3:30 மணி
பெங்களூருக்கு எதிராக மே 18 பெங்களூரு