“நான் இங்க இருக்க காரணமே அவங்கதான்.. சாதனையை பார்க்க மாட்டேன் டைம் வேஸ்ட்” – ஹர்திக் பாண்டியா பேட்டி

0
1129
Hardik

இந்திய வெள்ளைப் பந்து அணிகளுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய ஒரே வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்டியா மட்டுமே இருக்கிறார். இவர் அளவுக்கு இந்தியாவில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஜொலிக்க கூடிய ஆல் ரவுண்டர்கள் வேறு யாரும் கிடையாது.

பொதுவாகவே உலக கிரிக்கெட்டில் வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்களுக்கு எப்பொழுதும் மிக அதிகமாக மதிப்பு இருக்கும். அதற்கு விதிவிலக்கு இல்லாமல் இந்திய கிரிக்கெட்டிலும் இவருக்கு பெரிய மதிப்பு இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் கடந்த உலகக் கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக காலில் காயமடைந்து வெளியேறியவர், இன்னும் இந்திய அணிக்கு திரும்பவில்லை. தற்போது பயிற்சிகளை ஆரம்பித்துள்ள இவர், ஐபிஎல் தொடருக்கு திரும்புவார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, 10 ஆண்டுகளாக கேப்டன் பொறுப்பில் இருந்த ரோகித் சர்மாவை நீக்கி, ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணி புதிய கேப்டனாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

2015 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் வந்து இவரது முதல் சீசனிலேயே அந்த அணிக்கு கோப்பை கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அங்கிருந்து இவரது வாழ்க்கை மாற ஆரம்பித்து, இந்திய அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை தாங்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

- Advertisement -

கடந்த காலத்தைப் பற்றி பேசி உள்ள ஹர்திக் பாண்டியா கூறும் பொழுது “2015 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை வென்றது தான் நான் இங்கே இருப்பதற்கு மிகவும் முக்கியமான காரணமாக இருக்கிறது. இல்லையென்றால் நான் இங்கு இருப்பதற்கு வாய்ப்பு கிடையாது. என்னால் முடிந்த அளவுக்கு நான் பங்களிக்க வேண்டும் என்று நினைத்தேன். மும்பை அணிக்கு அப்பொழுது இரண்டு முறை கடினமான சூழ்நிலையில் நல்ல முறையில் விளையாடியது ஞாபகம் இருக்கிறது.

இதையும் படிங்க : “பெரிய வீரர்னு யாரும் நினைச்சுக்காதிங்க.. நீங்க இல்லாமையே ஜெயிப்போம்” – கவாஸ்கர் காட்டமான பேச்சு

இங்கிருந்துதான் என்னுடைய பயணம் ஆரம்பித்தது. குஜராத்தில் வந்த சிறுவனின் பெரிய கனவுகள் நனவாக ஆரம்பித்தது இந்த தருணத்தில் இருந்துதான். மேலும் நான் எப்பொழுதும் அரை சதம், சதம் போன்ற புள்ளி விபரங்களை ஞாபகம் வைத்துக் கொள்ள மாட்டேன். அது டைம் வேஸ்ட்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.