“பெரிய வீரர்னு யாரும் நினைச்சுக்காதிங்க.. நீங்க இல்லாமையே ஜெயிப்போம்” – கவாஸ்கர் காட்டமான பேச்சு

0
272
Virat

இளம் இந்திய அணி இந்த முறை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை அபாரமாக விளையாடி வென்று அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறது.

பெரிய வீரர்கள் பெரிய அளவில் இல்லாமல் இளம் இந்திய அணி தொடரை வென்று இருக்கின்ற காரணத்தினால், மேற்கொண்டு இந்திய அணியை உருவாக்குவது குறித்து, இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு இது பெரிய நிம்மதியை அளித்திருக்கிறது.

- Advertisement -

மேலும் பெரிய வீரர்கள் தொடர்களை தவறவிடும்போதெல்லாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி மிகக் கடுமையாக போராடுகிறது. ஒவ்வொரு இளம் வீரர்களும் பொறுப்பு எடுத்து, அதே சமயத்தில் தங்களை நிரூபிக்க சிறந்த நேரம் இதுவென பயன்படுத்தி தைரியமாக விளையாடுகிறார்கள்.

கடைசி ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் முதல் போட்டியில் படுமோசமாக விளையாடி தோற்று, அதற்கடுத்து பெரிய வீரர்கள் எல்லோரையும் தவற விட்டு, இளம் இந்திய அணி தொடரை வென்று அசத்தி காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “இந்தியா கடந்த முறை ஆஸ்திரேலியாவில் பல பெரிய வீரர்கள் இல்லாமல் விளையாடியது. அவர்கள் முதல் டெஸ்டில் 36 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகி, அதற்குப் பிறகு அந்தத் தொடரில் திரும்பி வந்து வென்றார்கள்.

- Advertisement -

மெல்போன் டெஸ்ட் போட்டியை வென்ற அவர்கள், சிட்னி டெஸ்ட் போட்டியை கடுமையாக விளையாடி காப்பாற்றினார்கள். ரிஷப் பண்ட் மேற்கொண்டு அரை மணி நேரம் இருந்திருந்தால் அந்த போட்டியையும் இந்தியா வென்று இருக்கும். பிறகு காபாவில் வென்று சரித்திரம் படைத்தார்கள்.

அந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது இந்திய இளம் வீரர்கள் வெளிப்படுத்திய துணிச்சல், சகிப்புத்தன்மை, உறுதிப்பாடு என இந்த முறையும் இங்கிலாந்து தொடரில் அப்படியே எதிரொலித்தது.

இதையும் படிங்க : கடைசி டெஸ்ட் போட்டிக்காக கில் செய்த காரியம்.. திடீரென பாராட்டி தள்ளும் ரசிகர்கள்

இந்திய அணியை நிர்வகித்த முறைக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு பெருமைகள் சேர வேண்டும். அவர்கள் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து, வடிவமைத்து சுதந்திரமாக விளையாட அனுமதித்தார்கள். இது நமக்கு வெற்றி பெறுவதற்கு பெரிய வீரர்கள் தேவையில்லை; பெரிய இதயம் கொண்ட வீரர்கள் தேவை என்பதை காட்டுகிறது” என்று கூறியிருக்கிறார்.