ஜடேஜா கேஎல்.ராகுல் விலகல்.. 3 புதிய வீரர்கள் அறிவிப்பு.. விளையாட யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்

0
484
Jadeja

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி நேற்று தோல்வி அடைந்திருந்தது.

இந்த நிலையில் இந்திய அணிக்கு பின்னடைவு தரும் விஷயமாக இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும், நல்ல பேட்டிங் ஃபார்மில் விராட் கோலி இடத்தில் விளையாடிய கேஎல்.ராகுலும் காயத்தால் மொத்தமாக தொடரை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இரண்டு வீரர்கள் வெளியேறி இருக்க மூன்று வீரர்களை பிசிசிஐ அறிவித்திருக்கிறது. முதல் முறையாக மும்பை மாநில அணிக்கு மிடில் ஆர்டரில் விளையாடும் சப்ராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இவருக்கு அடுத்து தமிழகத்தைச் சேர்ந்த வலதுகை சுழற் பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர், இடதுகை சுழற் பந்துவீச்சாளர் சவுரவ் குமார் இருவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இவர்கள் இருவரில் ஏற்கனவே வாஷிங்டன் சுந்தர் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகம் ஆகி விளையாடிவிட்டார். சவுரப் குமார் இதற்கு முன்பாக தேர்வாகி விளையாடும் வாய்ப்பை பெறாமல் இருந்திருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து விலகியதால் அவரது இடத்திற்கு ரஜத் பட்டி தார் தேர்வானார். எனவே கேஎல்.ராகுல் இடம் இவருக்கு கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

அதே சமயத்தில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் சவுரப் குமார் இருவருக்கும் இரண்டாவது போட்டிக்கான இந்திய விளையாடும் அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினம். ஒருவேளை வாய்ப்புக் கொடுப்பதாக இருந்தால் இடதுகை சுழற் பந்துவீச்சாளர் சவுரப் குமாருக்குதான் கொடுப்பார்கள். ஏனென்றால் வலது கை சுழற் பந்துவீச்சாளருக்கு அனுபவம் மிக்க ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டுமே போதுமானவர்.

ஆனால் இந்த இடத்தில் வலதுகை சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின், இடது கை சுழற் பந்துவீச்சாளர் அக்சர் படேல் மற்றும் இடது கை மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் என மூன்று வித்தியாசமான பந்துவீச்சாளர்களை எடுத்துச் செல்லவே இந்திய கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் விரும்புவார்கள்.

இதையும் படிங்க : “இங்கிலாந்தின் கேள்விக்கு ஒரு பதில் கூட இல்ல.. உடம்பு முழுக்க பயம்” – இந்திய வீரர்கள் குறித்து தினேஷ் கார்த்திக் விமர்சனம்

மேலும் தற்போதைய அணியில் இருந்து கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவருமே இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படுவது கடினம்.அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுக்கப்படும். இதில் யார் சரியாக விளையாடவில்லையோ, அவர்கள் அடுத்த மூன்று போட்டிகளுக்குமான இந்திய அணி அறிவிப்பில் இருக்க மாட்டார்கள்.

இந்த வகையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா இடத்தில் குல்தீப் யாதவ் மற்றும் கேஎல்.ராகுல் இடத்தில் ரஜத் பட்டிதார் இருவரும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.