2-3 மாதம் கிடையாது.. நான் ஒரு சீரியஸ்க்கு ஒன்றரை வருஷம் முன்னாடி தயாராவேன் – ஹர்திக் பாண்டியா பேட்டி

0
77
Hardik

இந்திய அணி சொந்த நாட்டில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை மிகச் சிறப்பாக இறுதிப்போட்டி வரையில் விளையாடி, இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தோல்வி அடைந்து உலகக் கோப்பையை இழந்தது பெரிய வடுவாக எல்லோருக்கும் அமைந்திருக்கிறது.

இந்த தொடரில் பங்களாதேஷ் அணியின் பொழுது பந்தை வீசிவிட்டு பந்தை பிடிக்கும் என்ற போது ஹர்திக் பாண்டியா காலில் காயமடைந்தார். அரையிறுதி போட்டிக்கு திரும்பி விடுவார் என்று கூறப்பட்டிருந்த நிலையில், அவர் ஒட்டுமொத்தமாக உலகக் கோப்பை தொடரை விட்டு காயம் காரணமாக வெளியேறினார்.

- Advertisement -

இதனால் இந்திய அணி ஒரு கட்டத்தில் 8 பேட்ஸ்மேன்களுடன் விளையாடுவதற்கான வாய்ப்பை இழந்தது. தேவைப்படும் பொழுது முகமது சிராஜ் இடத்தில் ஹர்திக் பாண்டியா விளையாடுவது, இந்தியா பேட்டிங் யூனிட்டை வலிமையாக வைக்கும் என கணிக்கப்பட்டு இருந்தது. மிகச் சரியாக இறுதிப் போட்டியில் எட்டாவது பேட்ஸ்மேன் இடம் தேவைப்பட்டது. அந்தப் போட்டியில் சீக்கிரம் விக்கெட் விழுந்த காரணத்தினால் பொறுமையாக விளையாட வேண்டி இந்திய அணி ரன் குறைவாக எடுத்தது குறிப்பிடத்தக்கது.

உலகக்கோப்பையில் ஏற்பட்ட சோகம்

இந்த நிலையில் உலககோப்பையில் காயம் அடைந்தது குறித்து பேசி உள்ள ஹர்திக் பாண்டியா ” நான் ஒரு தொடருக்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னால் தொடங்கி தயாராக கூடிய ஆள் கிடையாது. ஒன்று அல்லது ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பே பெரிய தொடர்களுக்கு தயாராவேன். இப்படித்தான் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு ஒரு வருடத்திற்கு முன்பே திட்டமிட்டு தயாராகி வந்தேன்.

எனக்கு உலகக் கோப்பையில் ஒரு வினோதமான காயம் ஏற்பட்டது. அந்தக் காயத்திலிருந்து மீண்டு வருவதற்கு அதிக காலம் தேவைப்பட்டது. எனக்கு காயம் சரியாவதற்கு 25 நாட்கள் ஆகும் என்று கூறப்பட்டது.நான் வெளிப்படையாக உலகக் கோப்பையை தவறவிடுவேன் என்று தெரிந்தது. ஆனால் சீக்கிரம் திரும்பி வர வேண்டி இருந்ததால் என்னுடைய அணிக்கு ஐந்து நாட்களில் வருவேன் என உறுதி கூறி இருந்தேன்.

- Advertisement -

என் கணுக்காலில் மொத்தம் மூன்று வெவ்வேறு இடங்களில் ஊசி போடப்பட்டது. மேலும் என்னுடைய கணுக்காலில் ஏற்பட்டிருந்தால் ரத்தத்தை அகற்ற வேண்டியிருந்தது. அது மிகவும் வீங்கி இருந்தது. என்னால் அணிக்கு விளையாடுவதை விட்டுக் கொடுக்க முடியவில்லை. நான் சீக்கிரத்தில் தயாராக என்னை தொடர்ந்து மீண்டு வருவதற்கு தள்ளிக் கொண்டே இருந்தேன். இதனால் எனது காயம் பெரிதாவதை உணர்ந்தேன். இதன் காரணமாக என்னுடைய காயம் குணமாவதற்கு மூன்று மாதங்கள் ஆனது. நான் அணிக்காக சிறந்ததை செய்ய வேண்டும் என்கின்ற நோக்கத்தில் செய்தது இப்படி ஆகிவிட்டது.

இதையும் படிங்க : பிசிசிஐ தடை.. பஞ்சாப் கிங்ஸ் ஜெர்சியை மாற்றியதற்கான காரணம் என்ன? – ப்ரீத்தி ஜிந்தா கூறிய உண்மை

அந்தக் காயம் ஏற்பட்ட பொழுது பத்து நாட்களில் எப்படியாவது திரும்பி வரவேண்டும் என வலி நிவாரணிகளை எடுத்துக் கொண்டேன். அணியில் மீண்டும் சேர்வது எப்படி என முயற்சி செய்வேன். நாட்டிற்காக விளையாடுவதை விட பெரிய பெருமையான விஷயம் வேறு எதுவும் கிடையாது. ஆனால் நான் உலகக் கோப்பையை தவறவிட்டேன். அது இதயத்தில் எப்பொழுதும் கனமான ஒன்றாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.