பிசிசிஐ தடை.. பஞ்சாப் கிங்ஸ் ஜெர்சியை மாற்றியதற்கான காரணம் என்ன? – ப்ரீத்தி ஜிந்தா கூறிய உண்மை

0
963
Punjab

16 வருட ஐபிஎல் வரலாற்றில் ஒரு முறை இறுதிப் போட்டிக்கும் ஒரே ஒரு முறை பிளே ஆப் சுற்றுக்கும் சென்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி, நடக்க இருக்கும் 17ஆவது ஐபிஎல் சீசனில் ஏதாவது செய்ய வேண்டும் என்று முனைப்பாக இருக்கிறது. கடந்த ஆண்டு ஒரு இந்திய வேகப்பந்துவீச்சாளர் அவர்களுக்கு குறைவாக இருந்தது. இதன் காரணமாக அவர்கள் 11 கோடிக்கு மேல் கொடுத்து ஹர்ஷல் படேலை வாங்கி இருக்கிறார்கள். மேலும் ஜானி பேர்ஸ்டோ வருவது அவர்களுக்கு பலம் சேர்க்கிறது.

பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி செய்யக்கூடிய எல்லா தவறுகளுக்கும் முன்னுதாரணமாக இருக்கக்கூடிய அணி. அதாவது ஆர்சிபி அணியை விட ஏலத்தில் அதிக தவறுகள் செய்வது, மேலும் வீரர்களை கொஞ்சம் பொறுத்து வைத்து பார்க்காமல் உடனுக்குடன் நீக்குவது என்பதில் பஞ்சாப் கிங்ஸ் அணி தான் எல்லோருக்கும் முன்னோடியாக இருந்து வருகிறது.

- Advertisement -

இதனுடைய உச்சம் என்னவென்றால் 2022 ஆம் ஆண்டு மயங்க் அகர்வால் 14 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் தக்க வைக்கப்பட்டு, மேலும் அவரை கேப்டனாகவும் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் கொண்டு வந்தது. ஆனால் 2023 ஆம் ஆண்டு மயங்க் அகர்வால் கேப்டனாக மட்டுமில்லாமல் பஞ்சாப் கிங்ஸ் அணியிலேயே கிடையாது.

இப்படி ஐபிஎல் தொடரில் ஏலம் மற்றும் வீரர்களை தக்க வைப்பது நீக்குவது தொடர்பாக என்னென்ன தவறுகள் செய்யக்கூடாதோ, அத்தனை தவறுகளையும் செய்து, இதுவரையிலான ஒட்டுமொத்த ஐபிஎல் சீசங்களில் மிக மோசமான செயல்பாடு கொண்ட அணிகளின் பட்டியலில் முதல் இடத்தை பஞ்சாப் கிங்ஸ் பிடித்து இருக்கிறது.

ஆரம்ப ஜெர்சியில் இருந்து மாறிய காரணம்

இந்த நிலையில் இந்த முறை பஞ்சாப் கிங்ஸ் பஞ்சாப் முல்லன்பூரில் அமைக்கப்பட்ட புதிய மைதானத்தில் விளையாடுகிறது. அதே சமயத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி சிவப்பு நிற சட்டை மற்றும் நீல நிற பேண்ட் கொண்ட புதிய ஆடையிலும் விளையாட இருக்கிறது. அவர்களுக்கு இது மூன்றாவது புதிய ஆடை வடிவமைப்பாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து ஜெர்ஸ்ஸியை வெளியிட்டு பேசிய அந்த அணியின் முதலாளிகளில் ஒருவரான நடிகை ப்ரீத்தி ஜிந்தா கூறும் பொழுது “முன்பு நாங்கள் சிவப்பு, கிரே, சில்வர் ஆகிய மூன்று கலர்களில் ஆடையை வைத்திருந்தோம். வெள்ளைப் பந்தின் நிறத்தை ஒட்டி கிரே மற்றும் சில்வர் கலர் இருப்பதால், இது பந்தை பார்ப்பதில் பார்வை குறைபாட்டை ஏற்படுத்தும் என்று பிசிசிஐ இந்த கலர்களை தடை செய்தது. எனவே சிவப்பு நிற ஜெர்சி உடன் விளையாடினோம். தற்பொழுது சிவப்பு மற்றும் நீல நிற ஜெர்சி உடன் விளையாட இருக்கிறோம்.

இதையும் படிங்க: தோனி ரோகித்.. ஐபிஎல் வரலாற்றில் எந்த கேப்டனும் செய்யாத சாதனையை ஹர்திக் செய்ய வாய்ப்பு

அணியின் முதுகெலும்பாக இருக்கும் எங்களின் விசுவாசம் மிக்க ரசிகர்களின் முன்பாக நாங்கள் புதிய ஜெர்சியை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த புதிய வண்ணங்கள் பஞ்சாபின் அணியின் உணர்ச்சிகளையும் துடிப்பையும் வெளிப்படுத்துகிறது. மேலும் இது ரசிகர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும். புதிய ஸ்டேடியத்தில் மறக்க முடியாத நினைவுகளை உண்டாக்குங்கள்” என்று கூறியிருக்கிறார்.