ரோகித் டிராவிட் பயிற்சியில் போட்ட புதிய திட்டங்கள்.. வித்தியாசமாக வந்த 2 வீரர்கள்.. ஹர்திக் ஸ்பெஷல் கவனிப்பு

0
1131
Hardik

ஐசிசி ஒன்பதாவது டி20 உலக கோப்பை தொடர் இன்னும் சில நாட்களில் ஜூன் மாதம் இரண்டாம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணி அமெரிக்காவில் முகாமிட்டு சூழ்நிலைகளுக்குப் பழக தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது.இந்திய அணியின் முதல் பயிற்சி அமர்வில் சில முக்கியமாற்றங்கள் செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி தற்போது அமெரிக்காவில் முகாமிட்ட இருக்கிறது. இந்திய அணி தனது முதல் சுற்றி நான்கு போட்டிகளையும் அமெரிக்காவிலேயே விளையாடுகிறது. இந்தியா பாகிஸ்தான் விளையாடும் போட்டியும் அங்கு நடைபெறுகிறது. புதிய கிரிக்கெட் நாடான அமெரிக்காவில் கிரிக்கெட்டை வளர்க்க ஐசிசி இப்படியான முடிவை எடுத்திருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா பேட்டிங் மிகவும் சுமாராகவே அமைந்திருந்தது. மேலும் அவர் 14 போட்டிகளில் பந்து வீசி ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் கொடுத்து 11 விக்கெட் கைப்பற்றி இருந்தார். இந்திய அணியைப் பொறுத்த வரையில் ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இதன் காரணமாகவே நேற்றைய பயிற்சியில் ஹர்திக் பாண்டியா முதலில் தொடர்ச்சியாக 40 நிமிடம் பந்து வீசி பயிற்சியில் ஈடுபட்டார். இத்தோடு பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் உடன் இணைந்து நீண்ட நேரம் அவர் ஆலோசனைகளும் ஈடுபட்டிருந்தார். இந்திய அணியின் பயிற்சி அமர்வை தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா இருவரும் மேற்பார்வையிட்டனர்.

மேலும் நேற்று அதிசயத்தக்க வகையில் பேட்டிங் பயிற்சிக்கு முதலில் பந்துவீச்சாளர்களான முகமது சிராஜ் மற்றும் அர்ஸ்தீப் சிங் இருவரும் அனுப்பி வைக்கப்பட்டார்கள். பவுலிங் யூனிட்டை பலப்படுத்தி, ஐந்து முழுமையான பந்துவீச்சாளர்களுடன், ஏழு பேட்ஸ்மேன்களை வைத்து மட்டுமே விளையாடும் திட்டமும் இந்திய நிர்வாகத்திடம் இருக்கிறது. இதன் காரணமாக பந்துவீச்சாளர்களுக்கும் பேட்டிங் பயிற்சி தற்போது அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : இங்கிலாந்து டி20 உலக கோப்பையை வென்றால்.. ஐபிஎல்-க்கு தான் முழு பெருமையும் சேரும் – நாசர் ஹுசைன் பேச்சு

இந்த நிலையில் தாமதமாக அமெரிக்காவிற்கு புறப்பட்டு இருக்கும் விராட் கோலி இன்னும் வந்து சேரவில்லை. இதன் காரணமாக அவர் பயிற்சியில் இடம் பெறவில்லை. இத்துடன் நாளை பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் பயிற்சி போட்டியிலும் விராட் கோலி விளையாட மாட்டார் என்று தெரிகிறது.