இங்கிலாந்து டி20 உலக கோப்பையை வென்றால்.. ஐபிஎல்-க்கு தான் முழு பெருமையும் சேரும் – நாசர் ஹுசைன் பேச்சு

0
211
Hussain

இங்கிலாந்து அணி தற்போது உள்நாட்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 எனக் கைப்பற்றி இருக்கிறது. இதற்கு அடுத்து உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்கு இரண்டு அணிகளும் வெஸ்ட் இண்டீஸ் வருகின்றன. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பைக்கு இங்கிலாந்து வீரர்களை ஐபிஎல் தொடர் சிறப்பாக தயார் செய்திருப்பதாக நாசர் ஹுசைன் கூறி இருக்கிறார்.

கடந்த முறை இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற முடியாமல் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி வெளியேறியது. மேலும் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணி இடமும் தோல்வியடைந்து அதிர்ச்சி கொடுத்தது.

- Advertisement -

இந்த நிலையில் டி20 உலக சாம்பியனான இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பை தொடரை சிறப்பாக அணுக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடாமல், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட சென்றார்கள்.

இங்கிலாந்து அணியின் பேட்டிங் யூனிட்டில் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த இடத்தில் விளையாடுவார்களோ, அதேபோலவே பெரும்பாலும் ஐபிஎல் தொடரிலும் விளையாடியிருந்தார்கள். மேலும் பெரிய கூட்டத்தின் முன்னால், அழுத்தம் நிறைந்த பெரிய போட்டிகளிலும் விளையாடுகிறார்கள். இந்த வகையில் ஐபிஎல் தொடர் இங்கிலாந்து வீரர்களுக்கு குறிப்பாக ஜோஸ் பட்லர், பில் சால்ட், வில் ஜேக்ஸ் ஆகியோர்களுக்கு மிகச்சிறப்பானதாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கூறும்பொழுது “இங்கிலாந்து மிகவும் சமநிலையான ஒரு அணி அவர்கள் பெரிய போட்டிகளில் விளையாடியவர்கள். ஐபிஎல் ஒரு வீரரை எப்படி அமைக்கிறது என்பது குறித்து நாம் அதிகம் பேசவில்லை. பெரிய மக்கள் கூட்டத்தின் முன்னால் பெரிய போட்டிகளில் விளையாட ஐபிஎல் வீரரை உருவாக்குகிறது. உலகக் கோப்பைக்கு சென்று விளையாட என்ன தேவையோ அதை ஐபிஎல் செய்திருக்கிறது.

இதையும் படிங்க : கோலி கிடையாது.. டி20 உ.கோ-ல் இவர்தான் இந்தியாவுக்கு அதிக ரன் எடுப்பார் – அம்பதி ராயுடு கணிப்பு

50 ஓவர் உலகக் கோப்பைக்கு இங்கிலாந்து அணி நல்ல நம்பிக்கையுடன் சென்றது. ஆனால் அவர்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இந்த முறை மெதுவான ஆடுகளங்களில் டி20 உலக கோப்பையில் அவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். அதற்காக அவர்கள் இரண்டாவது திட்டம் ஒன்றை வைத்திருக்க வேண்டும். தற்போது அவர்கள் ஒரு நல்ல அணியாக இருக்கிறார்கள். மேற்கொண்டு உலக கோப்பைக்கு சென்று சிறப்பாக செய்ய வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -