நல்லவேளை நான் ரிட்டையர்ட் ஆகிட்டேன்.. சூரியகுமார் மனுஷன் மாதிரி ஆடினா பரவால்ல – ஹர்பஜன் சிங் பேட்டி

0
67
Surya

இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்திருந்த காரணத்தினால், உள்நாட்டில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை தவிற விட்டார். மேலும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மூன்று போட்டிகளையும் தவற விட்டார். தற்போது பார்முக்கு திரும்பி இருக்கும் சூரியகுமார் யாதவ் பற்றி ஹர்பஜன்சிங் பேசியிருக்கிறார்.

நேற்று ஆர்சிபி அணிக்கு எதிராக சொந்த மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர் சி பி அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி 23 பந்தில் 53 ரன்கள் எடுத்தார். எனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆர்சிபி அணி திடீரென சவால் கொடுக்கும் சூழ்நிலை உருவானது.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று பேட்டிங்கில் இஷான் கிஷான் மற்றும் சூரியகுமார் இருவரும் சேர்ந்து ஆர் சி பி அடித்த 196 ரன்களை வெறும் 100 ரன்கள் என்பது போல காட்டி விட்டார்கள். இஷான் கிஷான் 34 பந்துகளில் 69 ரன்கள் அடித்து நொறுக்க, சூரியகுமார் யாதவ் வெறும் 17 பந்துகளில் அரை சதம் அடித்தார். மொத்தமாக 19 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார்.

காயம் குணமடைந்து திரும்பிய சூரியகுமார் யாதவ் பேட்டிங்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அவர் எந்த இடத்தில் விட்டு சென்றாரோ அதே இடத்தில் அப்படியே அவர் விளையாடும் ஷாட்டுகளை விளையாடினார். இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டும் இல்லாமல், டி20 உலகக்கோப்பை வரவிருக்கும் நிலையில் இந்திய கிரிக்கெட்டுக்கும் நல்ல செய்தியாக இருக்கிறது.

நேற்று சூரியகுமார் யாதவின் பேட்டிங் குறித்து பேசி இருக்கும் ஹர்பஜன் சிங் கூறும் பொழுது “சூரியகுமார் வேறொரு லீகில் இருக்கிறார். அவர் சிறப்பாக விளையாடும் பொழுது அவரிடமிருந்து யாரும் தப்பிக்க முடியாது. ஏபி.டிவிலியர்சை எல்லோரும் பார்த்திருக்கிறோம் ஆனால் இவர் அவரை விட சிறந்த வடிவத்தில் இருக்கிறார். மேலும் டி20 கிரிக்கெட்டில் அணிக்காக அதிக போட்டிகளை வென்ற வீரர் இவராகவே இருப்பார். ஐபிஎல் ஏலத்தில் சூரியகுமார் யாதவ் வந்தால், நான் அவரை முதலில் வாங்குவேன். ஆனால் அவர் ஏலத்திற்கு வரவே மாட்டார்.

- Advertisement -

இதையும் படிங்க : பும்ரா இந்த விஷயத்துக்கு கூச்சப்படறேதே கிடையாது.. அதனாலதான் இவ்வளவு பெரிய ஆளா வந்திருக்காரு – ஜாகிர் கான் பேட்டி

சூரியகுமார் யாதவ் மாதிரி ஒருவரை நான் பார்த்ததே கிடையாது. அவருக்கு எங்கு பந்து வீசுவது என்றே புரியவில்லை. நல்லவேளை நான் தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன். நீங்கள் வீசும் எல்லாவிதமான பந்தையும் அடிப்பதற்கு அவரிடம் ஷாட் இருக்கிறது. அவரால் அதை எப்படி வேண்டுமானாலும் விளையாட முடியும். அதே சமயத்தில் அவர் இன்னும் வேறு என்ன எல்லாம் வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை” என்று புகழ்ந்து கூறியிருக்கிறார்