டி20 உலகக் கோப்பை 2024

உன்னோட குப்பையை உன்னோட வச்சுக்கோ.. முட்டாள்தனத்தை நிறுத்தற வழிய பாரு – ஹர்பஜன் சிங் மைக்கேல் வாகனனுக்கு பதிலடி

நேற்று டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை இந்திய அணி இறுதியில் சந்திப்பதற்கு முன்பாக இருந்தே இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை இந்திய அணி நிர்வாகத்தின் மீது வைத்து வந்தார்கள். இந்த நிலையில் இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தியும் அவர்களது குற்றச்சாட்டுகள் நிற்கவில்லை. அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் ஆரம்பத்தில் இருந்தே இந்திய அணிக்கு சாதகமாக ஐசிசி நடந்து கொண்டு வருவதாகவும், இதனால் மற்ற அணிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டி இருந்தார். ஆனால் அவர் கூறிய எல்லாமே ஏற்கனவே ஐசிசி முடிவு செய்த ஒன்று.

இந்த நிலையில் நேற்று இங்கிலாந்து அணி இந்திய அணியிடம் 68 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய அணி பேட்டிங் செய்வதற்கு கடினமான ஆடுகளத்தில் மிகச் சிறப்பாக விளையாடி 171 ரன்கள் சேர்த்தது. பிறகு பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் இங்கிலாந்தை சுருட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்திய அணியின் இந்த வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாத மைக்கேல் வாகன், இங்கிலாந்து அணி தங்கள் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்து முதல் அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டிரினிடாட் மைதானத்தில் விளையாடி இருக்க வேண்டும், அது நடந்திருந்தால் சுலபமாக வெற்றி பெற்று இருப்பார்கள் என்று பேசி இருந்தார்.

- Advertisement -

அதாவது அவர்களுக்கு சாதகம் இல்லாத மைதானத்தில் அவர்களை திட்டமிட்டு விளையாட வைத்ததைப் போல அவர் கூறியிருந்தார். அவரின் இப்படியான பேச்சு இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினையும் கடுமையாக கோபம் அடைய வைத்திருந்தது. அவரும் கடுமையாகவே விமர்சனம் செய்திருந்தார்.

இதையும் படிங்க : இவங்க தப்பா பேசறதுக்கு பின்னாடி அந்த பிளான் இருக்கு.. மழை வந்திருந்தா மஜாவா இருந்திருக்கும் – அஸ்வின் பேட்டி

தற்போது இது குறித்து பேசி இருக்கும் ஹர்பஜன் சிங் “இந்தியாவுக்கு கயானா மைதானம் நல்லதாக இருக்கும் என்று நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்? இரு அணிகளும் ஒரே மைதானத்தில்தான் விளையாடினேன். மேலும் இங்கிலாந்து டாஸ் வென்ற சாதகமும் அவர்களுக்கு இருந்தது. இப்படி முட்டாள்தனமாக பேசுவதை நிறுத்துங்கள். இந்தியா அனைத்து துறைகளிலும் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.இந்த உண்மையை ஏற்றுக்கொண்டு அடுத்து செய்ய வேண்டியதை பாருங்கள். உங்களுடைய குப்பைகளை உங்களுடன் வைத்துக் கொண்டு, முட்டாள்தனமாக தர்க்கம் செய்யாதீர்கள்” என்று கூறி இருக்கிறார்.

Published by