இவங்க தப்பா பேசறதுக்கு பின்னாடி அந்த பிளான் இருக்கு.. மழை வந்திருந்தா மஜாவா இருந்திருக்கும் – அஸ்வின் பேட்டி

0
220
Ashwin

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டியில் நுழைந்து இருக்கிறது. இந்திய அணியின் வெற்றி குறித்து பேசிய இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்து முன்னாள் வீரர்களின் விமர்சனங்கள் குறித்து காட்டமாகப் பதில் அளித்திருக்கிறார்.

இந்திய அணி தனது குழுவில் முதல் இடம் அல்லது இரண்டாவது இடம் எப்படி வந்தாலும் கயானா மைதானத்தில் பகலில் விளையாடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. காரணம் 27 ஆம் தேதி பகலில் இந்திய அணி விளையாட வேண்டும். ஏனென்றால் அப்பொழுதுதான் இந்தியாவில் இரவில் போட்டியை பல பேர் பார்ப்பார்கள், தொடரை நடத்தும் ஐசிசிக்கு வியாபார ரீதியாக லாபம் கிடைக்கும். இதை எந்த கிரிக்கெட் வாரியங்களும் எதிர்க்க கிடையாது. அவர்களுக்கு உண்மை தெரியும்.

- Advertisement -

இந்த நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் இந்திய அணிக்கு சாதகத்தை உருவாக்குவதற்காகவே இவ்வாறெல்லாம் செய்யப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும் இதன் காரணமாக மற்ற அணிகளுக்கு அநியாயம் நடக்கிறது என்றும் பேசியிருந்தார்.

மேலும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் இந்திய அணியை இங்கிலாந்து சாதாரணமாக வீழ்த்தி விடும் என்பது போல பேசியிருந்தால். இங்கிலாந்து தென் ஆப்பிரிக்க அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும் என்று உறுதியாகக் கூறியிருந்தார்.

இப்படி இங்கிலாந்து முன்னால் வீரர்கள் பேசுவது குறித்து பதில் அளித்த ரவிச்சந்திரன் அஸ்வின் “இவர்களுக்கு உண்மை தெரியும் இவர்கள் வேண்டுமென்றே பேசுகிறார்கள். இது திட்டமிட்ட ஒரு பேச்சு. ஏனென்றால் இந்திய அணிக்கு வெளியில் இருந்து நிறைய அழுத்தங்கள் எல்லாப் போட்டிக்கும் இருக்கும். அதை இன்னும் அதிகப்படுத்தும் விதமாக இந்திய அணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவதற்காக பேசுகிறார்கள். நாமும் இதை கொஞ்சம் எடுத்துக்கொண்டு அழுத்தத்தை சேர்த்துக் கொள்கிறோம்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியாவுக்கு சாதகமாக இருந்தது ஜெயிச்சிட்டாங்க.. ஆனா தகுதியானவங்க – திடீர் பல்டி போட்ட நாசர் ஹுசைன்

போட்டி நல்ல முறையில் நடைபெற்று ஏதாவது ஒரு அணி இறுதிப் போட்டிக்குள் போக வேண்டும் என்பதுதான் எனக்கு விருப்பம். ஆனால் இவர்கள் பேசும் இப்படியான பேச்சின் காரணமாக நான் உண்மையிலேயே மழை வந்து இந்திய அணி உள்ளே செல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஏனென்றால் அப்பொழுது தான் இவர்கள் ஒரு வாரத்திற்கு இல்லாமல் கட்டுரைகளாக எழுதி தள்ளிக் கொண்டு இருப்பார்கள். நாம் அதைப் பார்த்து ஜாலியாக சிரித்துக் கொண்டிருக்கலாம்” என்று கூறியிருக்கிறார்.