இதே கோலியா இருந்தா 2 மாசம் புகழ்ந்து இருப்பிங்க.. பட்லர் யாரோதான – ஹர்பஜன் சிங் விமர்சனம்

0
107
Buttler

நேற்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் அதிரடியாக 60 பந்துகளில் 107 ரன்கள் குவித்து தனி வீரராக அந்த அணிக்கு வெற்றி தேடித் தந்தார். இது குறித்து ஹர்பஜன் சிங் பாராட்டி பேசி இருக்கிறார்.

ஜோஸ் பட்லர் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை இரண்டு சதங்கள் அடித்து இருக்கிறார். ஆர்சிபி அணிக்கு எதிராக அந்த அணியின் விராட் கோலி சதம் அடித்திருந்த போதும், கொல்கத்தா அணிக்கு எதிராக அந்த அணியின் சுனில் நரைன் சதம் அடித்து இருந்த பொழுதும், ஜோஸ் பட்லர் பதிலடி சதம் அடித்து ராஜஸ்தான் அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசும்பொழுது “ஜோஸ் பட்லர் ஒரு ஸ்பெஷல் பிளேயர். அவர் வேற லெவல் வீரர். மேலும் நேற்று போல் அவர் முதல் முறையாக செய்யவில்லை. பலமுறை அவர் இப்படி செய்திருக்கிறார். ஆனாலும் கூட அவரைப் பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை, ஏனென்றால் அவர் இந்திய வீரர் இல்லை.

இதை விராட் கோலி இந்த சதத்தை அடித்திருந்தால், தோனி ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்ததை பேசியது போலவும் நாம் இரண்டு மாதங்கள் தொடர்ந்து புகழ்ந்து பேசி இருப்போம். நமது வீரர்களை கொண்டாடுவது போலவே அவரையும் நாம் கொண்டாட வேண்டும். ஏனென்றால் அவர் இந்த விளையாட்டின் ஜாம்பவான் வீரர்.

ஜோஸ் பட்லர் மிகவும் அமைதியாகவும் கம்போசர் ஆகவும் இருந்தார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிக்ஸர்கள் அடித்ததோடு, சிங்கிள்ஸ் மற்றும் இரண்டு ரன்களும் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன் அவுட் ஆகி கொண்டிருக்கும் பொழுது, நீங்கள் அமைதியாக உங்களை நிலை நிறுத்தி உங்கள் சொந்த விளையாட்டை ஆடுவது மிகவும் முக்கியம்.

- Advertisement -

இதையும் படிங்க : எல்லாமே ஒரு ஜோக்கா இருந்திருக்கும்.. ஆனா கம்பீர்தான் அதை மாத்தினாரு – சுனில் நரைன் பேட்டி

பட்லர் விளையாடியது மிகவும் பயங்கரமான ஒரு இன்னிங்ஸ். அவர் விளையாடிய விதத்தில் இருந்து ரியான் பராக் போன்ற இந்திய இளம் வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ரியான் பராக் பற்றி பேசினாலும் அவரும் திறமையான வீரர் 14 பந்துகளில் அதிரடியாக 34 ரன்கள் எடுத்தார்” என்று கூறியிருக்கிறார்