வீடியோ: ரசிகரின் ஐபோனை உடைத்த சிஎஸ்கே டேரில் மிட்சல்.. அடுத்து நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்

0
329
Daryl

சிஎஸ்கே அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு மினி ஏலத்தில் நியூசிலாந்தின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டேரில் மிட்சலை 14 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. அவர் சேப்பாக்கத்தில் ரசிகர் ஒருவரின் ஐபோனை உடைத்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

நடப்பு ஐபிஎல் 17வது சீசனில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணி 11 போட்டிகளில் விளையாடி ஆறு வெற்றிகள் உடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்து வருகிறது. மேலும் மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளை வெல்லும் பொழுது சிக்கல் என்று பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். ஒரு போட்டியை மட்டுமே வென்றால் மற்ற அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும்.

- Advertisement -

மேலும் இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தனது முக்கிய பந்துவீச்சாளர்களான தீபக் சாஹர், மதிஷா பதிரனா மற்றும் முஸ்தஃபிசூர் ரஹ்மான் ஆகியோரை இழந்திருக்கிறது. இவர்கள் மூவரும் தான் பிளேயிங் லெவனில் இடம்பெற்று எல்லா போட்டியும் விளையாட கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட முக்கிய மூன்று வீரர்கள் பவுலிங் யூனிட்டில் இல்லாதது சிஎஸ்கே அணிக்கு பெரிய பின்னடைவை உண்டாக்கி இருக்கிறது.

இந்த நிலையில் டேரில் மிட்சல் புல் ஷாட் விளையாட சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், மைதானத்தின் ஓரத்தில் பயிற்சி செய்து கொண்டு இருந்தார். அப்பொழுது ரசிகர்கள் அவருடைய பயிற்சியை பார்த்தபடியும், அதில் சிலர் தங்களுடைய மொபைலில் அதை வீடியோ எடுத்த படியும் இருந்தார்கள்.

அவர் தொடர்ந்து பயிற்சி செய்யும் பொழுது ஒரு பந்து வலையை தாண்டி வந்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்த ஒருவரை தாக்கியது. இதில் சம்பந்தப்பட்ட நபரும் காயமடைந்தார் அவருடைய ஐபோனும் உடைந்தது. இதை பயிற்சியில் இருந்த டேரில் மிட்சல் பார்த்துவிட்டார்.

- Advertisement -

இதையும் படிங்க : சூரியகுமாருக்கு பவுலிங் பண்ணவே முடியல.. டி20 உ.கோ-ல் ஏதோ பண்ண போறார் – புகழும் ஹைதராபாத் கோச்

உடனே அவர் காயம் பட்டு மொபைலை இழந்த ரசிகருக்கு தனது இரண்டு கையுறைகளை பரிசாக கொடுத்து மகிழ்ச்சிப்படுத்தினார். தற்பொழுது இது ரசிகர்களால் மிகவும் நெகிழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. மேலும் சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பகிரப்பட்டும் வருகிறது!