5 சீசன்னு கனவு காண வேண்டாம்.. ஆர்சிபி நெனச்சது இல்லனா கண்டிப்பா மாட்டுவாரு – ஹர்பஜன் எச்சரிக்கை

0
397

18 வது ஐபிஎல் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த சூழ்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி குறித்து இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன்சிங் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

பெங்களூர் அணியின் புதிய கேப்டன்

17 வருடங்களாக ஐபிஎல் கோப்பையை ஜெயிப்பதற்கு முயற்சித்தும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடர்ந்து தடுமாறி வருகிறது. எனவே இந்த முறை கோப்பையை கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று ஆர்சிபி அணிக்கு வலுவான பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களை எடுத்து புதிய கேப்டனாக இளம் வீரர் ராஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டிருக்கிறார். எனவே இப்போது அவர் மீது அதிக எதிர்பார்ப்புகள் எழுந்து இருக்கிறது.

மேலும் விராட் கோலியின் ஜெர்சி எண் 18 ஆக இருக்கும் நிலையில் இந்த சீசன் 18வது ஆண்டாக இருப்பதால் இந்த முறை பெங்களூர் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என்று ஆர்சிபி ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விராட் கோலி போன்ற சூப்பர் ஸ்டார்களை கையாள வேண்டிய அழுத்தமும் தற்போதைய இளம் கேப்டனுக்கு இருக்கும் நிலையில், ஐபிஎல் அணியை கையாள்வது என்பது எளிதான விஷயம் அல்ல என்று இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன்சிங் கூறியிருக்கிறார்.

- Advertisement -

அவரின் நிலையை பார்க்க வேண்டும்

இது குறித்து அவர் விரிவாகக் கூறும்போது “பட்டிதார் போன்ற ஒருவருக்கு இது மிகப்பெரிய சவாலாக இருக்கும். பெங்களூர் போன்ற பெரிய அணிக்கு தலைமை தாங்குவது என்பது எளிதான காரியம் கிடையாது. ஒரு போட்டிக்கு எந்த வீரர்களை விட வேண்டும் யாரை எப்போது பந்து வீச வைக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும். எனவே அவருக்கு முன் அனுபவம் கிடையாது. ஒரு நாட்டை வழிநடத்துவது கடினம் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் இது போன்ற ஒரு அணியை வழிநடத்துவது மிகவும் கடினம்.

இதையும் படிங்க:சிஎஸ்கே பணம் கொடுக்க தோனிதான் காரணம்.. அவர் செஞ்ச உதவியை வாழ்நாளில் மறக்க மாட்டேன் – சுதீப் தியாகி உருக்கம்

ஏனென்றால் அதை நான் முன்னரே அனுபவித்து இருக்கிறேன். பட்டிதார் நிறைய அழுத்தத்தை எதிர்கொள்வார். மேலும் பெங்களூர் அணி இதுவரை ஒரு கோப்பையை கூட வெல்லாததால் மக்கள் அவர் மீது அதிக எதிர்பார்ப்புகளை வைத்திருக்கிறார்கள். மேலும் விராட் கோலி போன்ற சூப்பர் ஸ்டார் வீரர்களையும் நிர்வகித்து தனது பேட்டிங்கையும் அவர் நிர்வகிக்க வேண்டும். ஆர்சிபி பட்டிதாரை 5 சீசனுக்கு கேப்டனாக நியமித்திருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த சீசனில் அவர் சிறப்பாக செயல்படவில்லை என்றால் இந்த இடத்தில் இருக்கிறார் என்று பார்க்க வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -