சிஎஸ்கே பணம் கொடுக்க தோனிதான் காரணம்.. அவர் செஞ்ச உதவியை வாழ்நாளில் மறக்க மாட்டேன் – சுதீப் தியாகி உருக்கம்

0
308

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று நடைபெற உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டு விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மகேந்திரசிங் தோனி குறித்து முன்னாள் வீரர் சுதீப் தியாகி சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சென்னை அணி செய்த உதவி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதன்முதலாக 2010 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற நிலையில், அதற்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக 2011 ஆம் ஆண்டு கோப்பையை வென்று சாதனை படைத்தது. அப்போது கேப்டன் மகேந்திர சிங் தோனியின் கீழ் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் சுதீப் தியாகி சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அதற்குப் பிறகு இவரின் திறமையால் இந்திய அணியிலும் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

அதற்குப் பிறகு காயத்தின் காரணமாக இந்திய அணியில் விளையாட முடியாத சூழ்நிலை உருவானது. அதற்கு பின்னர் உள்நாட்டு போட்டிகளில் மட்டும் தொடர்ந்து சுதீப் தியாகி விளையாடி வந்தார். இந்த சூழ்நிலையில் சென்னை அணிக்காக விளையாடியது குறித்தும், அப்போது மகேந்திர சிங் டோனி தனக்கு நிதி ரீதியாக செய்த உதவி குறித்தும் சில உணர்ச்சிகரமான கருத்துக்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

தோனிதான் என்னை ஆதரித்தார்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “என் முதுகில் ஒரு அழுத்த முறிவு ஏற்பட்டது. அதற்குப் பிறகு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. நான் அப்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருந்தேன். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த போது தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எனக்கு உதவியது. அப்போது மகேந்திர சிங் தோனி நிதி ரீதியாக தன்னை ஆதரிக்கவும், பயிற்சி மற்றும் காயத்திலிருந்து மீட்புக்காக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பவும் கேட்டுக் கொண்டார். அந்த உதவி என் வாழ்நாளில் மறக்க முடியாதது ஆகும்.

இதையும் படிங்க:2025 ஐபிஎல்-ல் பங்களாதேஷ் பிளேயர்கள் ஏன் இல்லை?.. லக்னோ கொடுத்த அழைப்பு – டஸ்கின் அகமத் பேட்டி

அப்போது தோனி என்னிடம் கவலைப்பட வேண்டாம், காயங்கள் தொடர்ந்து வருகின்றன. ஆனாலும் நீங்கள் ஒரு வலுவான நிலையில் திரும்பி வருவீர்கள் என்று ஆறுதல் மிக்க வார்த்தைகளை கூறினார்” என்று சுதீப் தியாகி கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு சென்னை அணிக்காக இரண்டு வருடங்கள் விளையாடி ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். தற்போது 43 வயதிலும் ஐபிஎல் தொடரில் விளையாடும் தோனி பல இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடவும் வாய்ப்பு கொடுத்து பெரிய காரணமாக அமைந்திருக்கிறார்.

- Advertisement -