கோலி 59 பந்து 83 ரன்..கேகேஆர் 5.5 ஓவர் 85 ரன்.. ஆர்சிபி தோல்விக்கு காரணம் யார்? – இந்திய முன்னாள் வீரர் பேச்சு

0
236
Virat

நேற்று ஐபிஎல் தொடரில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் மோதிக்கொண்ட போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் தோற்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்தது.

பவர் பிளேவில் கேப்டன் பாப் டு பிளிசிஸ் விக்கெட்டை மட்டும் இழந்து 61 ரன்கள் குவித்தது. இதற்கு அடுத்து அடுத்த ஐந்து ஓவர்களில் வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆர் சி பி அணியின் தோல்விக்கு பவர் பிளே முடிந்து சுழல் பந்துவீச்சாளர்களை தாக்கி விளையாட முடியாதது முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

அதே சமயத்தில் இலக்கை நோக்கி விளையாடிய கே கே ஆர் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த சுனில் நரைன் மற்றும் பில் சால்ட் இருவரும் ஆறு ஓவர்களில் பவர் பிளேவில் 85 ரன்கள் அதிரடியாக எடுத்தார்கள். ஏறக்குறைய போட்டி பவர் பிளேவிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. வழக்கம்போல் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் மீது விமர்சனங்கள் மீண்டும் என ஆரம்பித்திருக்கிறது. அவர் 59 பந்துகளை சந்தித்து 83 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதில் முதல் 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ” சுனில் நரைன் தாக்கி விளையாடும் பொழுது அவர்களது டெம்ப்ளேட் மிகவும் தெளிவாக இருக்கிறது. அவர் தைரியமாக சிக்ஸர்கள் அடிக்க செல்கிறார். அவருக்கு பவுன்சர்கள் மற்றும் யார்க்கர்கள் வீசப்படும் என்பது தெரியும். ஆனாலும் தொடர்ந்து துணிச்சலாக விளையாடுகிறார். முதல் ஆறு ஓவர்களில் பெங்களூரு செய்யாததை அவர்கள் செய்தார்கள். அந்த இடத்திலேயே போட்டியை தூரமாக எடுத்துச் சென்று விட்டார்கள்.

பில் சாட்டும் புத்திசாலித்தனமாக இருந்தார். அவர் முகமது சிராஜின் முதல் ஓவரில் 18 ரன்கள் எடுத்தார். அவர் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடி ரன்கள் கொண்டு வந்தார். விராட் கோலி 59 பந்தில் 83 ரன்கள் எடுக்க, கேகேஆர் 5.5 ஓவரில் 85 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்து விட்டது. வைசாக் விஜயகுமார் தவிர மற்ற எல்லா பந்துவீச்சாளர்களும் அடி வாங்கினார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : 0 விக்கெட் 100 ரன்கள்.. அடுத்த போட்டியில் விளையாடுவாரா ஸ்டார்க்.?. ஸ்டூவர்ட் பிராட் ஓபன் டாக்

நான் மீண்டும் நல்ல ஃபார்மில் இருக்கும் வெங்கடேஷ் ஐயரை பார்த்தேன். சுனில் நரேன் மற்றும் வெங்கடேஷ் ஐயர், பந்துவீச்சில் பயன்படுத்திக்கொண்ட ரசல் என எல்லோரிடமும் கம்பீர் செலுத்தி இருக்கும் தாக்கம் தெரிகிறது. அவர் இவர்களை கொஞ்சம் வலிமையாக்கி இருக்கிறார். வெங்கடேஷ் ஐயரை எடுத்துக் கொண்டால் அவருக்கு பவுண்டரி சிக்ஸர்கள் அடிப்பதற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டிருப்பது தெரிகிறது” என்று கூறியிருக்கிறார்.