தோனி 9வது இடத்தில் வந்தா.. சிஎஸ்கே டீம்க்கு தேவையில்லை.. அவங்களை எடுக்கலாம் – ஹர்பஜன் சிங் விமர்சனம்

0
449
Harbhajan

இன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே மோதிய போட்டியில், மகேந்திர சிங் தோனி சர்துல் தாக்கூருக்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்தது பெரிய விவாதத்தை உருவாக்கி இருக்கிறது. இது குறித்து ஹர்பஜன் சிங் கடுமையான முறையில் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

இன்று டாஸ் தோற்று சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது. சிஎஸ்கே அணிக்கு கேப்டன் ருதுராஜ் மற்றும் டேரில் மிட்சல் 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இதற்கு அடுத்து வரிசையாக தொடர்ந்து விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து விளையாட அனுப்பப்பட்ட ரவீந்திர ஜடேஜா 26 பந்தில் 43 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில் ஆட்டத்தின் 16ஆவது ஓவரில் சான்ட்னர் ஆட்டம் இழக்க, வெளியில் தோனி மற்றும் சர்துல் தாக்கூர் இருந்தார்கள். இந்த நிலையில் நான்கு ஓவருக்கு தோனி வருவார் என்று எதிர்பார்க்கும் பொழுது சர்துல் தாக்கூர் வந்தார். அவர் 18.4 ஓவரில் ஆட்டம் இழந்தார். இதற்குப் பிறகு 10 பந்துகள் இருக்கும் பொழுது தான் தோனி உள்ளே வந்தார். மேலும் முதல் பந்தில் ஆட்டம் இழந்தார்.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் தனது விமர்சனத்தில் கூறும்பொழுது “தோனி ஒன்பதாவது இடத்தில் பேட்டிங் செய்ய விரும்பினால் அவர் சிஎஸ்கே அணிக்காக விளையாட கூடாது. அவருடைய இடத்தில் ஒரு ஃபாஸ்ட் பவுலர் விளையாட வேண்டும். அது சிஎஸ்கே அணிக்கு மிகவும் நல்லது. முடிவெடுக்கக்கூடிய இடத்தில் இருந்து தனது அணியை வீழ்த்தி விட்டு அவர் பேட்டிங் செய்ய வராமல் இருந்தார்.

- Advertisement -

சர்துல் தாக்கூர் முன்னால் வந்தார். அவரால் தோனி போல ஷார்ட்கள் விளையாட முடியாது. தோனி இந்த தவறை ஏன் செய்தார் என்று எனக்குப் புரியவில்லை. அவரது முடிவு இல்லாமல் எதுவும் நடக்காது. இந்த முடிவை வேறு யாராவது எடுத்தார்கள் என்று சொன்னால் நான் அதை நம்ப மாட்டேன்.

இதையும் படிங்க : ஜெயிச்சா ஒரு மாதிரி.. தோத்தா ஒரு மாதிரி பேசறாங்க.. ஆனா இவரை பத்திதான் புரியல – ருதுராஜ் பேட்டி

சிஎஸ்கேவுக்கு விரைவான ரன்கள் தேவைப்பட்டது. தோனி முந்தைய ஆட்டங்களில் அதைச் செய்தார். ஆனால் பஞ்சாப் அணிக்கு எதிராக முக்கிய ஆட்டத்தில் அவர் பின்வாங்கியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இன்று சிஎஸ்கே அணி வெற்றி பெற்றாலும் நான் தோனி குறித்து இந்த விமர்சனத்தை கூறுவேன். மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும், எது சரி என்று நான் கூறுவேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -