“ரோகித் சிஎஸ்கேவுக்கு விளையாடனுமா?.. புரிஞ்சிக்கவே முடியல” – ஹர்பஜன்சிங் அம்பதி ராயுடு பேச்சுக்கு பதில்

0
82
Rohit

ஐபிஎல் தொடரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ரோகித் சர்மா தலைமையில் விளையாடாமல், புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாட இருக்கிறது. இது ஒட்டுமொத்தமாக மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கும், ஐபிஎல் தொடர் ரசிகர்களுக்கும் வித்தியாசமான அனுபவமாக இருக்கப் போகிறது.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் என முதல் மூன்று ஐபிஎல் பட்டங்களை இந்த அணிகள் வெல்ல, பெரிய எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்டிருந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இது பின்னடைவாக அமைந்தது. அப்போது இந்திய கிரிக்கெட்டில் மிகவும் புகழ் பெற்றிருந்த சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திற்கு உடனடியாக ஐபிஎல் தொடரில் பெரிய வெற்றி தேவைப்பட்டது. இந்த நேரத்தில் ரோகித் சர்மா வாங்கப்பட்டு அதிரடியாக கேப்டனாக கொண்டுவரப்பட்டார். அங்கிருந்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்பட்டு பத்து ஆண்டுகளில் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ஐந்தாவது கோப்பையை வென்ற கேப்டன் என்கின்ற பெருமையும் அவரிடம்தான் இருந்தது. கடந்த ஆண்டுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்று இந்த சாதனையை மகேந்திர சிங் தோனி தலைமையில் சமன் செய்தது. மேலும் இந்திய டி20 அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா இருக்கும்பொழுது, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன் பொறுப்பில் இல்லாதது நிறைய விமர்சனங்களை கொண்டு வந்திருக்கிறது.

இந்த நிலையில் முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ், அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு விளையாடி ஐபிஎல் கோப்பைகளை வென்றிருக்கும் அம்பதி ராயுடு, அடுத்த வருடம் ரோஹித் சர்மா சிஎஸ்கே அணிக்கு வர வேண்டும் என்றும், தோனி இல்லாத பொழுது அவர் கேப்டன் ஆகவும் செயல்பட வேண்டும் என்று, இது மிகச் சிறப்பான ஒன்றாக இருக்கும் எனவும் கூறியிருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து அம்பதி ராயுடு போல இரு அணிகளுக்கும் விளையாடி இருக்கும் ஹர்பஜன்சிங் கூறும் பொழுது “எனக்கு இப்போது வரை ஐபிஎல் ஏலத்தின் இயக்க விதி எப்படி இருக்கிறது என்று புரியவில்லை. அடுத்த வருடம் மெகா ஏலம் நடக்க இருக்கிறது என்று சொல்கிறார்கள். அதில் ரோகித் சர்மா ஏலத்திற்கு வந்தால் யார் வாங்குவார்கள்? என்று உறுதியாக கூறவே முடியாது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த மாதிரியான முடிவில் இருந்தாலும், ஏலத்தில் ஒரு வீரரை வாங்குவது யார் கையிலும் கிடையாது.

இதையும் படிங்க : “டி20ல கோலியை வேண்டாம்னு நினைக்கிறவங்க தெரு கிரிக்கெட் விளையாடுறவங்க” – பாகிஸ்தான் முகமது இர்பான் பேச்சு

மேலும் நடைபெற்று முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான், துருவ் ஜுரல் ஆகியோர் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். மேலும் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கு சிறந்த சாதனைகளுக்கான தொடராக அமைந்தது. விராட் கோலி போன்ற வீரர் இல்லாமல் 4க்கு ஒன்று என இங்கிலாந்துக்கு எதிராக வெல்வது சிறப்பானது. எனவே நான் அனைவருக்கும் என்னுடைய மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.