“டி20ல கோலியை வேண்டாம்னு நினைக்கிறவங்க தெரு கிரிக்கெட் விளையாடுறவங்க” – பாகிஸ்தான் முகமது இர்பான் பேச்சு

0
255
Virat

இந்தியாவில் ஐபிஎல் சீசன் மார்ச் 22 துவங்கி மே மாதம் இறுதியில் முடிவடைகிறது. இதற்கு அடுத்து உடனடியாக வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 5ஆம் தேதி முதல் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் விளையாடும் மொத்தம் 20 அணிகளும் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு விட்டன. எனவே எல்லா அணி நிர்வாகங்களும் உலகக் கோப்பைக்கான தயாரிப்புகளில் கடினமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்திய அணி நிர்வாகம் டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியை தயாரிப்பதில் கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட அணியை உருவாக்கி வந்தது. ஆனால் திடீரென 14 மாதங்கள் கழித்து கடந்த ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் கேப்டனாக ரோகித் சர்மாவையும், மூன்றாம் இடத்து பேட்ஸ்மேனாக விராட் கோலியையும் கொண்டு வந்தார்கள்.

- Advertisement -

இரண்டு புதிய நட்சத்திர பேட்ஸ்மேன்கள் தற்பொழுது இந்திய டி20 அணிக்குள் வந்திருக்கின்ற காரணத்தினால், ஏற்கனவே இதற்கான வாய்ப்பிலிருந்த இரண்டு வீரர்கள் வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். உதாரணமாக திலக் வர்மா வெளியேறினால், அவர் பகுதி நேரமாக வீசக்கூடிய ஆப்-ஸ்பின் பந்துவீச்சை இழக்க நேரிடும்.இதனால் ஆறாவது பந்துவீச்சாளர் கிடைக்காது. பேட்டிங் வரிசையை எட்டாம் இடம் வரைக்கும் அமைக்க முடியாது.

இப்படியான பிரச்சனைகள் உருவாகி இருக்கின்ற காரணத்தினால் விராட் கோலியை மட்டும் டி20 உலக கோப்பை இந்திய அணியில் இருந்து நீக்குவதற்கான பரிசீலனை மற்றும் ஆலோசனை நடைபெற்று வருவதாக நேற்று முதல் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவத் தொடங்கியது. இதற்கு இந்தியா தாண்டி வெளிநாடுகளில் இருந்தும் முன்னாள் வீரர்கள் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த விஷயம் குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் முகமது இர்பான் கூறும் பொழுது ” சமீபத்தில் இந்தியாவுக்காக அவர் போட்டிகளை வென்று இருக்கிறார். அவரது இடம் குறித்து கேள்வி எழுப்புவது நியாயமான ஒன்று கிடையாது. டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் இடம் குறித்து கேள்வி எழுப்பக் கூடியவர்கள் தெரு கிரிக்கெட் விளையாடக் கூடியவர்கள் போலத்தான். இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. இந்திய அணியில் விராட் கோலி இல்லாமல் அவர்களால் எதுவுமே செய்ய முடியாது.

- Advertisement -

இதையும் படிங்க : என்னா மனுஷன்யா.. டீம்ல செலக்ட் பண்ணலனாலும்.. பிசிசிஐயை பாராட்டிய புஜாரா.. என்ன நடந்தது

ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் இதுவரை என்ன செய்திருக்கிறார் என்பதை நாம் பார்த்தோம். உலகக்கோப்பையில் அவர் இந்தியாவுக்காக மூன்று நான்கு போட்டிகளை தனியாக வென்று கொடுத்தார். விராட் கோலி இதே கடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக இல்லாமல் இருந்திருந்தால் குறைந்தபட்சம் ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணிகளிடம் இந்தியா ஏற்கனவே தோல்வி அடைந்திருக்கும். எனவே விராட் கோலி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான வீரர்” எனக் கூறியிருக்கிறார்.