பாபர் அசாம் கோலியுடன் ஐபிஎல் விளையாடனுமா? – பாக் ரசிகருக்கு ஹர்பஜன் சிங் தந்த நச் பதில்

0
88
Babar

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் முதன்முதலாக 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் பிரான்சிஸைஸ் டி20 கிரிக்கெட் லீக் தொடங்கப்பட்டது. இந்த முதல் ஆண்டில் மட்டுமே பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றார்கள். அதற்குப் பிறகு அரசியல் காரணங்களால் பாகிஸ்தான் வீரர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

முதல் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சோகைல் தன்வீர், கம்ரன் அக்மல் மற்றும் யூனுஸ் கான் என மூன்று பாகிஸ்தான் வீரர்கள் இருந்தார்கள். இதில் மிதவேக பந்துவீச்சாளர் சோகையல் தன்வீர் 11 போட்டிகளில் 12.09 சராசரியில் 22 விக்கெட்டுகள் கைப்பற்றி, அந்த ஆண்டு அதிக விக்கெட் கைப்பற்றியவருக்கான ஊதா நிற தொப்பியை வென்றார்.

- Advertisement -

மேலும் ஐபிஎல் தொடரில் சோயப் அக்பர், முகமது ஹபீஸ், சல்மான் பட், உமர் குல், முகமது ஆசிப், சோயப் மாலிக் மற்றும் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி ஆகியோர் விளையாடியிருக்கிறார்கள்

இவர்களுக்கு அடுத்து 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் அசார் முகமது மட்டுமே பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இவர் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்று இருந்த காரணத்தினால் ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்கப்பட்டார். இதைத் தவிர வேறு எந்த ஆண்டிலும் வேறு எந்த பாகிஸ்தான் வீரர்களும் ஐபிஎல் தொடரில் பங்கேற்றது கிடையாது.

கனவு காண்பதை நிறுத்துங்கள் :

- Advertisement -

தற்போது ஐபிஎல் தொடரில் உலக கிரிக்கெட் நாடுகள் பலவற்றிலிருந்து வீரர்கள் இந்தியா வந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு பணம் கிடைப்பதோடு புதிய கிரிக்கெட் பற்றிய பார்வையும் கிடைக்கிறது. மேலும் இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெறும் சமயத்தில் பெரிய அணிகள் அனைத்துமே தங்களது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நிறுத்தி வைக்கின்றன. இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் அனுமதி இல்லாமல் இருப்பது, கிரிக்கெட் உலகில் அவர்களை தனித்து விட்டது போல் அமைந்திருக்கிறது.

சமூக வலைதளத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர் சிஎஸ்கே அணியில் தோனி மற்றும் ரிஸ்வான், மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா மற்றும் ஷாகின் அப்ரிடி, ஆர்சிபி அணியில் விராட் கோலி மற்றும் பாபர் அசாம் இணைந்து விளையாடுவது பல இந்திய மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களின் கனவாக இருக்கிறது என்று பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க : ரோகித்-ஹார்திக் பஞ்சாயத்து.. சமாதான கொடியை தூக்கி வரும் மலிங்கா பேச்சு.. முடிவுக்கு வருமா?

இந்தப் பதிவை எடுத்து பதில் அளித்து இருந்த ஹர்பஜன் சிங் “இந்தியர்களுக்கு இது போன்ற எந்த கனவும் கிடையாது. நீங்கள் இப்படியான கனவு காண்பதை நிறுத்துங்கள். முதலில் கனவு காணும் தூக்கத்தில் இருந்து எழுங்கள் என்று கூறியிருக்கிறார். ஹர்பஜன் சிங்கின் இந்த பதில் தற்போது சமூக வலைதளத்தில் இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களாலுமே பெரிய பேசு பொருளாக மாறி வருகிறது.