ரோகித்-ஹார்திக் பஞ்சாயத்து.. சமாதான கொடியை தூக்கி வரும் மலிங்கா பேச்சு.. முடிவுக்கு வருமா?

0
183
Rohit

நடப்பு ஐபிஎல் தொடரில் ரசிகர்களின் மிக முக்கிய எதிர்பார்ப்பாக இருப்பது என்னவென்றால், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா, தற்பொழுது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் ஹர்திக் பாண்டியா உடன் இணைந்து எப்படி செயல்படுவார்? இது குறித்து ரோஹித் சர்மா ஏதாவது பேசுவாரா? என்பதுதான் பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் டிரேடிங் முறையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இரண்டு சீசன்களில் ஒரு முறை கோப்பையையும் ஒரு முறை இறுதிப் போட்டிக்கும் அழைத்துச் சென்ற வெற்றிகரமான கேப்டன் ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் தங்கள் அணிக்கே அழைத்து வந்தது.

- Advertisement -

இது ஐபிஎல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேச்சுகளை உருவாக்கினாலும் கூட, ரோகித் சர்மா அடுத்த சில ஆண்டுகள் கேப்டனாக இருப்பார், குறைந்தபட்சம் ஒரு ஆண்டாவது கேப்டனாக இருப்பார் அதற்குப் பிறகு ஹர்திக் பாண்டியா கேப்டனாக கொண்டுவரப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் என்று கூறப்பட்டது.

ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் எல்லோருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, இந்திய அணிக்கு தற்பொழுது மூன்று வடிவங்களிலும் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மாவை, தங்களுக்கு ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்த கேப்டனான ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியதோடு மட்டுமில்லாமல், புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை கொண்டு வந்தது. இது மும்பை அணிக்குள் இருக்கும் சில முக்கிய வீரர்களிடமும், அணியின் ரசிகர்களிடமும் பெரிய எதிர்ப்பை சம்பாதித்தது.

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் தென் ஆப்பிரிக்காவில் மார்க் பவுச்சர் கூறும்பொழுது ” இதை எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகும். பல ஆண்டுகளாக கேப்டனாக இருந்து வரும் ரோகித் சர்மா, இதன் மூலம் ஒரு பேட்ஸ்மேன் ஆக மட்டும் எந்தவித அழுத்தமும் இல்லாமல் ரன்கள் குவிப்பதற்கு நல்ல விஷயமாக அமையும்” என்றும் பேசி இருந்தார்.

- Advertisement -

ரோஹித் சர்மாவின் மனைவி அவர்கள் இதற்கு தன்னுடைய எதிர்ப்பை உடனுக்குடனேயே சமூக வலைத்தளத்தில் மறைமுகமாக பதிவு செய்திருந்தார். இதன் காரணமாக எப்படியும் இந்த பிரச்சனை வெடிக்கும் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இதுவரையில் ரோகித் சர்மா இது குறித்து எதுவும் வாய் திறந்து பேசவில்லை. அணியின் புதிய ஜெர்சிக்கான விளம்பரத்தில் கூட கலந்து கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க : டி20 உலககோப்பையில் வரவிருக்கும் தெறி ரூல்.. 60 நொடி.. 5 பெனால்டி ரன்.. இனி ஏமாத்தவே முடியாது

இந்த நிலையில் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக கொண்டுவரப்பட்டிருக்கும் லசித் மலிங்கா கூறும் பொழுது ” ரோகித் சர்மாவும் ஹர்திக் பாண்டியாவும் நல்ல நண்பர்கள். அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்குச் சென்று சாம்பியன் பட்டத்தையும் ஒரு முறை இரண்டாவது இடத்தையும் பிடித்தார். அதனால் அவருக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. மேலும் பும்ரா மற்றும் ரோகித்துக்கும் நல்ல பிணைப்பு இருக்கிறது. நாங்கள் ஒரு நல்ல யூனிட் ஆக இருந்து வருகிறோம்” என்று கூறியிருக்கிறார்.