ஒரே நாள்தான் இருக்கு.. அபிஷேக்க டி20 உ.கோ இந்திய டீம்ல சேருங்க.. இவரை தூக்கிடுங்க – ஹர்பஜன் சிங் கோரிக்கை

0
1735
Harbhajan

இந்தியாவில் நடைபெற்று வரும் 17 வது ஐபிஎல் சீசன் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. இதற்கு அடுத்து உடனே அடுத்த மாத துவக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலக கோப்பைத் தொடர் தொடங்க இருக்கிறது. இதற்கான இந்திய அணியில் அபிஷேக் சர்மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும் என ஹர்பஜன்சிங் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இந்தியத் தேர்வுக்குழு ஏப்ரல் கடைசி மாதத்தில் டி20 உலகக் கோப்பைக்கு 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது. இந்த அணியில் ஒரு ஆச்சரிய முடிவாக நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் சேர்க்கப்பட்டார்கள். இதன் காரணமாக ரிங்கு சிங் இடம் பெற முடியவில்லை.

- Advertisement -

மேலும் இந்த இந்திய அணிக்கு சுப்மன் கில், கலில் அகமது, ரிங்கு சிங், ஆவேஸ் கான் என மொத்தம் நான்கு ரிசர்வ் வீரர்களும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழக வீரர் நடராஜன் மற்றும் ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் சந்திப் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என கோரிக்கைகள் வந்தது.

தற்பொழுது அறிவிக்கப்பட்டு இருக்கும் டி20 உலக கோப்பை அணியில் ஏதாவது மாற்றங்கள் செய்வதற்கான கடைசி நாள் இன்று மட்டும்தான். மே 25ஆம் தேதி உடன் மாற்றங்கள் செய்வதற்கான கெடு முடிவடைகிறது. இதற்குப் பிறகு வீரர்களுக்கு காயமடைந்தாலோ அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக அணியவிட்டு விலகினாலும் மட்டும்தான் மாற்றம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் 450-க்கும் மேற்பட்ட ரன்களை 200க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் அபிஷேக் சர்மா அடித்து நொறுக்கி இருக்கிறார். நேற்று ராஜஸ்தானுக்கு எதிரான இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் நான்கு ஒவர்களுக்கு 24 ரன்கள் மட்டும் தந்து ரியான் பராக் மற்றும் ஹெட்மையர் என முக்கிய விக்கெட்டுகளை தூக்கினார். அவர் மீதான பார்வை இதனால் மிகவும் அதிகமாகி இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ஹைதராபாத் பைனல் போய் இருக்கலாம்.. அவங்க பேட்ஸ்மேன்கள் முட்டாள்.. இப்படி செய்யலாமா? – நவ்ஜோத் சிங் சித்து பேட்டி

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறும் பொழுது “அபிஷேக் ஷர்மா டி20 உலகக்கோப்பை இந்திய அணிக்காக விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவிற்கு சென்ற வேண்டியவர். அவர் இந்திய அணிக்காக விளையாட முற்றிலும் தகுதியானவர். இந்திய அணியில் நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். மாற்றங்களை செய்ய இன்னும் ஒரே நாள்தான் இருக்கிறது. எனவே இந்த சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவரை நீக்கிவிட்டு அபிஷேக் ஷர்மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். அவர் பேட்டி மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் பங்களிப்பு செய்யக்கூடியவர்” என்று கூறியிருக்கிறார்.