டி20 உலகக் கோப்பை 2024

நேத்து ஜெயிச்சி இருக்கலாம்.. ஆனா இந்தியா சரியான டீம் கிடையாது.. அவர் வேணும் – ஹர்பஜன் சிங் விமர்சனம்

நேற்று டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி 205 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. மேலும் இதுவரையில் தோல்வி அடையாத அணியாக இருந்து வருகிறது. இருந்தபோதிலும் டி20 உலக கோப்பைக்குஇந்திய அணியின் தேர்வு பற்றி ஹர்பஜன்சிங் கடுமையான விமர்சனத்தை வைத்திருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் விராட் கோலி ரன்கள் ஏதும் எடுக்காமல் இரண்டாவது ஓவரில் வெளியேறினார். ஆனால் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 41 பந்தில் 92 ரன்கள் குவித்தார். அவரை எந்த ஆஸ்திரேலிய பந்துவீச்சாளராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஒரு கட்டத்தில் இந்திய அணி 230 முதல் 240 ரன்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மிக வேகமாக சென்ற இந்திய அணி கடைசி ஐந்து ஓவர்களில் மிகவும் சுமாராக விளையாடி ஓவருக்கு 10 ரன்கள் கூட பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் எடுக்கவில்லை. சிவம் துபே எதிர்பார்த்து அளவுக்கு ஹர்திக் பாண்டியா உடன் இணைந்து விளையாடவில்லை.

தொடர்ந்து இந்திய அணி கடைசி சில ஓவர்களில் போட்டியை மெதுவாக்குகிறது. இதன் காரணமாக எல்லா போட்டிகளிலும் 10 முதல் 20 ரன்கள் குறைவாகவே வந்து கொண்டிருக்கிறது. இதற்கு கடைசி நேரத்தில் நிறைய ஷாட் ஆடக்கூடிய பேட்ஸ்மேன் களத்தில் இல்லாதது பிரச்சினையாக இருக்கிறது.

- Advertisement -

இது குறித்து பேசி இருக்கும் ஹர்பஜன் சிங் கூறும் பொழுது “ரிங்கு சிங்கை அணியில் தேர்வு செய்யாதது பற்றி எனக்கு இன்னும் புரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் அவர் உலகக் கோப்பையில் விளையாடியிருக்க வேண்டும். டெத் ஓவர்களில் அவரால் விருப்பப்பட்ட படி சிக்ஸர்கள் அடிக்க முடியும். இத்தகைய வீரர்கள் அணிக்கு தேவை.

இதையும் படிங்க : வேற லெவல்யா.. ரோகித் செய்த அந்த ஸ்பெஷல் சம்பவம்.. எழுந்து நின்னு கைதட்டிய விராட் கோலி

உலகக் கோப்பை முடியப்போகிறது என்பது எனக்குத் தெரியும். ஆனால் ரிங்கு சிங் வெளியில் அமர்ந்திருப்பது எனக்கு பிடிக்கவில்லை. அவர் இருந்திருந்தால் ஹர்திக் பாண்டியா உடன் இணைந்து கடைசி கட்ட ஓவர்களில் மிகவும் பரபரப்பாக இருந்திருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts