கில் ஒழுங்கு மீறியதால் இந்தியா அனுப்பப்படுகிறாரா.. அவரே வெளியிட்ட சர்ச்சை பதிவு.. என்ன நடக்கிறது?

0
321
Gill

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் ரிசர்வ் வீரர்களாக சுப்மன் கில், ஆவேஷ் கான், கலில் அகமது, ரிங்கு சிங் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள். இதில் தற்பொழுது கில் மற்றும் ஆவேஸ் கான் இருவரும் இந்தியாவுக்கு திரும்ப அனுப்பப்படுகிறார்கள். இந்த சூழ்நிலையில் கில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு மீண்டும் சர்ச்சைகளை உருவாக்கி இருக்கிறது.

தற்போது ஒழுங்கு நடவடிக்கை காரணமாகவே இவர்கள் இருவரும் இந்திய அணியை விட்டு வெளியே அனுப்பப்படுகிறார்கள் என்கின்ற செய்தி இருந்து வருகிறது. கில் இந்திய அணியுடன் இணைந்து இல்லை என்றும், அவர் அமெரிக்காவில் சுற்றுலா செல்கிறார் என்றும், அணிவுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் இது குறித்து விளக்கம் அளிக்கும் பொழுது, அமெரிக்காவில் முதல் சுற்றின் போது மட்டுமே ரிசர்வ் வீரர்கள் நால்வருமே தேவைப்பட்டார்கள் என்றும், அடுத்து மேற்கொண்டு இரண்டு வீரர்கள் மட்டுமே போதும் என்றும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதாகவும், அதன் காரணமாகவே கில் திருப்பி அனுப்பப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.

இந்திய பேட்டிங் அணியின் பயிற்சியாளர் கூறியிருக்கும் இந்த கருத்து ஏற்றுக்கொள்ளும் அளவில் இல்லை என்பதுதான் உண்மை. எனவே இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணிக்குள் ஏதோ நடந்திருக்கிறது என்று சந்தேகப்பட்டு வருகிறார்கள். ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை போல கில் மீதும் எடுக்கப்பட்டு இருப்பதாக நம்புகிறார்கள்.

இந்த நிலையில் இன்று இன்ஸ்டாகிராமில் கில் ரோகித் சர்மா மற்றும் அவரது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து “நானும் ஷாமியும் ரோகித் சர்மாவிடம் ஒழுக்க கலையைக் கற்றுக் கொள்கிறோம்” என்று ஒழுக்கம் குறித்து பதிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : என்ன கர்மாவா? நான் வெயிட் பண்றேன்.. பாக் பத்திரிக்கையாளருக்கு மைக்கேல் வாகன் தந்த பதிலடி

ஏற்கனவே ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கில் இந்தியா அனுப்பப்படுவதாக சர்ச்சைகள் சூழ்ந்து இருக்கும் நிலையில். கில் இப்படியான வார்த்தையை பயன்படுத்தி வெளியிட்டு இருக்கும் பதிவு மேலும் சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது. கில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு இப்படி ஒரு பதிவை செய்தாரா? அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு பதிலடியாக இப்படி ஒரு பதிவு செய்தாரா? என்கின்ற குழப்பம் நீடிக்கிறது