குஜராத் டைட்டன்ஸ் இளம் வீரர் தந்தையை சந்தித்த கில்.. உருக்கமான பின்னணி கொண்ட கதை

0
194
Gill

இந்திய கிரிக்கெட்டில் ஐபிஎல் மிகப்பெரிய புரட்சியை செய்து கொண்டு வருகிறது. அடிப்படை கிரிக்கெட் கட்டமைப்புகள் இல்லாத குக்கிராமங்களில் இருக்கின்ற வீரர்கள் கூட, உலக அளவில் முதல் இடத்தில் இருக்கும் பிரான்சிசைஸ் டி20 லீக் ஐபிஎல் தொடரில் இடம் பெற முடிகிறது.

மேலும் ஐபிஎல் தொடரில் சிறப்பான முறையில் திறமையை வெளிப்படுத்தும் வீரர்களை, இந்திய கிரிக்கெட் வாரியம் மிக நம்பிக்கை உடன் அங்கிருந்தே சர்வதேச அணிக்குள் கொண்டு வருகிறது.

- Advertisement -

இதன் காரணமாக இந்தியாவில் ஐபிஎல் தொடர் இளம் வீரர்களுக்கு மிகப்பெரிய மேடையாக அமைந்திருக்கிறது. ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை திறமைக்குதான் முதல் இடம் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு அணியும் கோப்பையை குறி வைக்கின்ற காரணத்தினால், தனிப்பட்ட குழுவை வைத்து சிறந்த இளம் வீரர்களை கண்டறிந்து பயன்படுத்துகிறார்கள்.

இந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ராபின் மின்ஸ் 3.60 கோடி ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இவர் இதுவரை மாநில அணிக்காக விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இடது கை பேட்ஸ்மேன் ஆனா இவரை எல்லோரும் செல்லமாக லெப்ட் ஹேண்ட் பொல்லார்டு என அழைக்கிறார்கள். காரணம் முதல் பந்தில் இருந்தே மிக அதிரடியாக விளையாடுவதை இயல்பாக வைத்திருக்கக் கூடிய வீரராக இருக்கிறார்.

- Advertisement -

மேலும் ஐபிஎல் தொடரில் முதல் பழங்குடி இன வீரர் என சிறப்பை பெற்றிருக்கிறார். ஐபிஎல் தொடர் அந்த அளவிற்கு எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்கக்கூடிய மிகப்பெரிய உலகமேடையாக மாறி வருகிறது.

இவருடைய தந்தை ராணுவ வீரராக இருந்து தற்போது அதன் மூலமாக ஜார்க்கண்ட் ராஞ்சி மாநிலத்தின் விமான நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். ராஞ்சியில் டெஸ்ட் போட்டியை முடித்துக் கொண்டு கிளம்பிய இந்திய அணியில் இடம்பெற்று இருந்தவரும், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனமான சுப்மன் கில் ராபின் மின்ஸ் தந்தையைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டு, மேலும் இன்ஸ்டாகிராமில் அது குறித்த குறிப்பையும் எழுதி இருக்கிறார்.

இதையும் படிங்க : சம்பள பட்டியலில் சர்பராஸ் கான் துருவ் ஜுரலுக்கு ஏன் இடமில்லை?.. பிசிசிஐ கொடுத்துள்ள தெளிவான விளக்கம்

இன்ஸ்டாகிராமில் கில் கூறும் பொழுது “ராபின் மின்ஸ் தந்தையைச் சந்தித்ததில் மிகவும் பெருமை அடைகிறேன். உங்களின் பயணமும் கடின உழைப்பும் மிகவும் ஊக்கம் அளிக்கக் கூடியதாக இருக்கிறது. ஐபிஎல் தொடரில் உங்களைப் பார்க்க மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.