சிஎஸ்கே எங்களுக்கு இதை இப்பவே செஞ்சது நல்லது.. எங்க தோல்விக்கு காரணம் இதுதான் – சுப்மன் கில் பேட்டி

0
266
Gill

இடம்பெற்று வரும் 17ஆவது ஐபிஎல் சீசனில் ஹர்திக் பாண்டியா மற்றும் முகமது சமி என தாக்கம் தரக்கூடிய இரண்டு நட்சத்திர வீரர்கள் இல்லாமல், இளம் வீரர் சுப்மன் கில் தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணி களம் இறங்கி இருக்கிறது. இருந்தபோதிலும் முதல் போட்டியில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் வலிமையான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி எல்லோரையும் மீண்டும் திரும்பி பார்க்க வைத்தது.

இந்த நிலையில் இரண்டாவது போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிய கேப்டன் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியை எதிர்த்து நேற்று விளையாடியது. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி அதன் 3 வருட ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன் வித்தியாசமாக 63 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். மேலும் சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் முன்பு போல சுழல் பந்துவீச்சு சாதகமாக இல்லை. 200 ரன்கள் அடிக்கக்கூடிய, அதே சமயத்தில் வேகமும் பவுன்சும் இருக்கக்கூடிய ஆடுகளமாகக் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியின் ரச்சின் ரவீந்திர 20 பந்துகளில் 46 ரன்கள் என அதிரடியான துவக்கத்தை தர, 20 ஓவர்களில் அந்த அணி ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 206 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 143 ரன்கள் மட்டுமே 8 விக்கெட் இழப்புக்கு எடுத்து 63 ரன் வித்தியாசத்தில் இரண்டாவது போட்டியில் தோற்றது.

தோல்விக்கு பின் பேசிய குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் “ஒட்டுமொத்தமாக அவர்கள் எங்களை வீழ்த்தி விட்டார்கள். அவர்கள் பேட்டில் செய்யும் பொழுது பவர் பிளேவிலும், நாங்கள் பேட்டிங் செய்யும்பொழுது கடைசிக்கட்டத்திலும் அவர்களுடைய பேட்டிங் மற்றும் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. இந்த ஆடுகளத்தில் 190 முதல் 200 ரன்கள் துரத்த முடியும் என்று நினைத்தோம். துரதிஷ்டவசமாக இந்த முறை எங்களால் முடியவில்லை. இந்த போட்டி எங்கள் பந்துவீச்சாளர்களுக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ருதுராஜ்கிட்ட இந்த விஷயத்துல தோனியை பார்க்கிறேன்.. ஆனா அதுல நானே குழம்பிடுறேன் – தீபக் சகர் பேட்டி

இப்படிப்பட்ட ஒரு போட்டி பெரிய தொடரில் நடுவிலோ அல்லது இறுதியிலோ வருவதை விட முன்பே வருவது நல்லது. பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருந்த ஆடுகளத்தில் எங்களால் இந்த ரன்னை துரத்த முடியும் என்று நம்பினோம். ஆனால் எங்களை நாங்களே வீழ்த்திக் கொண்டது போல் இருக்கிறது. கேப்டன் கேப்டன் சி யில் இந்த போட்டியில் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். குஜராத் டைட்டன்ஸ் போன்ற அணிக்கு கேப்டனாக இருப்பது மிகவும் உற்சாகமாக மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.