ருதுராஜ்கிட்ட இந்த விஷயத்துல தோனியை பார்க்கிறேன்.. ஆனா அதுல நானே குழம்பிடுறேன் – தீபக் சகர் பேட்டி

0
4761
Chahar

இன்று ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி, ஒட்டுமொத்தமாக சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு செல்வதாக அமைந்திருக்கிறது.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்து சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் ரச்சின் ரவீந்திரா, கேப்டன் ருதுராஜ், சிவம் துபே, சமீர் ரிஸ்வி என எல்லோரும் அதிரடியாக விளையாடி பரவசப்படுத்தினார்கள். இதற்கு அடுத்து பந்துவீச்சில் வந்து தீபக்சகர் துஷார், தேஷ்பாண்டே, முஸ்தாபிசுர் ரஹ்மான், டேரில் மிச்சல் பதிரனா என எல்லோரும் விக்கெட்டுகளை கைப்பற்றி, ஆட்டத்தில் இரண்டாவது பகுதியிலும் சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தினார்கள்.

- Advertisement -

இதையெல்லாம் விட மிக முக்கியமாக டேரில் மிட்சல் பந்துவீச்சில் விஜய் சங்கருக்கு ஒரு அவுட்சைட் எட்ஜ் எடுக்க, மகேந்திர சிங் தோனி அவருடைய வலது புறத்தில் 2.27 மீட்டர் டைவ் அடித்து அபாரமாக அந்தப் பந்தை கேட்ச் பிடித்தார். அவர் பேட்டிங் செய்ய வராததால் ஏமாற்றத்தில் இருந்த சிஎஸ்கே ரசிகர்கள், இப்படி ஒரு கேட்ச் கிடைக்கவும் சேப்பாக்கம் மைதானத்தையே ஒரு சில நொடிகள் அதிர வைத்து விட்டார்கள்.

இன்றைய போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை, இளம் வீரர் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. குஜராத் அணி கடந்த மூன்று வருட ஐபிஎல் வரலாற்றில் தோல்வியடைந்த மிக அதிகபட்ச ரன் வித்தியாசமாக இது அமைந்திருக்கிறது.

மேலும் கடந்த இரண்டு போட்டியிலும் பந்துவீச்சாளர்கள் ரிவ்யூ எடுப்பது தொடர்பாக நேராக மகேந்திர சிங் தோனியிடமே வழக்கம்போல் கேட்க ஆரம்பித்தார்கள். இன்றைய போட்டியில் தீபக் சகர் தோனி இடம் கேட்க, அதற்கு அவர் கேப்டன் ருதுராஜிடம் கேட்குமாறு சிரித்தபடியே கூறினார். இன்றைய போட்டியில் வழக்கம் போல் பவர் பிளேவில் மூன்று ஓவர்கள் வீசிய தீபக் சகர், குஜராத் டைட்டன்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கில் மற்றும் சகா இருவரது விக்கெட்டையும் கைப்பற்றினார்.

- Advertisement -

இதையும் படிங்க : எங்க டீம்ல அவர் செய்யறதுல பாதி நான் செஞ்சா போதும்.. சந்தோசமா இருப்பேன் – ரச்சின் ரவீந்தரா பேட்டி

போட்டி முடிவுக்கு பின் பேசிய அவர் “ஐபிஎல் விளையாட ஆரம்பித்த காலத்தில் இருந்தே பவர் பிளேவில் மூன்று ஓவர்கள் வீசிக் கொண்டிருக்கிறேன். இது கடினமான வேலை என்றாலும் கூட எனக்கு பழகி விட்டது. தற்பொழுது இரண்டு பவுன்சர்கள் வீசலாம் என்கின்ற விதி எல்லா வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் உதவியாக இருக்கிறது. முன்பு ஒரு பவுன்சரை முன்கூட்டி வீசினால், அதற்கடுத்து பேட்ஸ்மேன்கள் ஃபுல் லென்த் பந்தை எதிர்பார்த்து இருப்பார்கள். தற்பொழுது அப்படி இருக்க முடியாது. சென்னை விக்கெட்டில் எப்பொழுதும் பவுன்ஸ் இருக்கும் ஆனால் கொஞ்சம் மெதுவாக இருக்கும். பில்டிங் பொசிஷன் வைப்பதில் ருதுராஜ் தோனி பாய் போலவே இருக்கிறார். ஆனால் முடிவு எடுப்பது குறித்து கேட்பதற்கு நான் இருவரையும் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. இந்த விஷயத்தில் குழம்பிவிடுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.