8.4 ஓவரில் சேஸ் செய்த டெல்லி அணி.. ஐபிஎல்-ல் யாரும் செய்யாத சாதனை.. குஜராத் அணி படுதோல்வி

0
770
Rishabh

நடப்பு 17வது ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெறும் 8.4 ஓவர்களில் குஜராத் அணியை டெல்லி அணி வென்றது.

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் குஜராத் அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் சுப்மன் கில் ஆறு பந்தில் எட்டு ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

குஜராத் அணி தங்கள் கேப்டன் விக்கெட்டை இழந்ததும் அதற்கு அடுத்து தொடர்ச்சியாக விக்கெட்டுகளை கொடுத்துக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் ரஷித் கான் மட்டுமே நிலைத்து நின்று விளையாடி 24 பந்தில் 31 ரன்கள் எடுத்தார். குஜராத் அணியில் மொத்தம் எட்டு வீரர்கள் ஒற்றை இலக்க ரன் மட்டுமே எடுத்தார்கள்.

குஜராத் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்தபட்ச அந்த அணியின் ரன் இதுவாக அமைந்தது. முகேஷ் குமார் மூன்று, இஷாந்த் சர்மா மற்றும் ஸ்டப்ஸ் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து டெல்லி அணிக்கு அதிரடியாக ஆரம்பித்த ஜாக் பிரேசர் மெக்கர்க் 10 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் . தொடர்ந்து ஷாய் ஹோப் 19(10), அபிஷேக் போரல் 15 (7), ரிஷப் பண்ட் 16* (11), சுமித் குமார் 1* (5) ரன்கள் எடுக்க டெல்லி அணி 8.4 ஓவர்களில், நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இழப்பை எட்டி, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது.

- Advertisement -

இதையும் படிங்க : சிஎஸ்கே முஸ்தபிசுர் ஐபிஎல் விளையாடி கத்துக்க எதுவும் இல்லை.. அவர விட்டுருங்க – பங்களாதேஷ் கிரிக்கெட் செயல்பாட்டுத் தலைவர் பேச்சு

இந்த போட்டியில் 100 ரன்கள் எதிர் அணியை ஆல் அவுட் செய்து, ஐபிஎல் தொடரில் 10 முறை எதிரணியை 100 ரன்கள் ஆல் அவுட் செய்த முதல் அணி என்கின்ற சாதனையை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி படைத்திருக்கிறது. மேலும் குஜராத் அணி முதல் முறையாக 100 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகி இருக்கிறது.