நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் முதல் வெற்றி பெற்றது. அவர்கள் அணியில் நட்சத்திர வீரர்கள் வெளியேறி இருந்தாலும் கூட, ஒரு அணியாக சேர்ந்து அருமையாக விளையாடி இருந்தார்கள்.
இந்த நிலையில் இரண்டாவது போட்டி அந்த அணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக இருந்தது. நேற்று நடந்த இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி எதிர்பார்ப்புக்கு மாறாக மிகவும் சுமாராகவே விளையாடியது. அந்த அணி இடம் காணப்படும் வழக்கமான ஆக்ரோஷம் வெளிப்படவில்லை. வெற்றியை நோக்கி அவர்கள் விளையாடியது போலவே தெரியவில்லை.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். ரச்சின் ரவீந்தரா, ருதுராஜ், சிவம் துபே மூவரும் பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி சிஎஸ்கே அணியை 26 ரன்கள் என்கின்ற பெரிய இலக்குக்கு கொண்டு வந்தார்கள். குஜராத் டைட்டன்ஸ் அணியில் எல்லா பந்துவீச்சாளர்களும் ரன்களுக்கு சென்றார்கள்.
இதன் காரணமாக பந்துவீச்சாளர்களை மாற்றி பயன்படுத்துவதிலும், மேலும் கள வியூகங்களை மாற்றி அமைப்பதிலும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் நிறைய நேரம் செலவிட வேண்டி இருந்தது. என்ன மாதிரியான திட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும், சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் பதிலடி கொடுத்துக் கொண்டே இருந்ததால் காலதாமதம் உருவானது.
இதற்கடுத்து மீண்டும் பேட்டிங் செய்ய வந்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்து 63 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக அவர்கள் ரன் ரேட்டையும் இழந்தார்கள். சிஎஸ்கே அணிக்கு நல்ல ரன் ரேட் கிடைக்க இரண்டாவது வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
இதையும் படிங்க : என் பவுலிங்ல அடிக்க முடியாதுனு சொன்னேன்.. ஆனா சிவம் துபே வித்தியாசமா பண்ணிட்டார் – மோகித் சர்மா பேச்சு
இந்த போட்டியில் தாமதமாக பந்து வீசியதற்காக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு 12லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்த ஐபிஎல் அறிக்கையில் ” குறைந்தபட்ச ஓவர் ரேட் தொடர்பான குற்றத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இது முதல் குற்றம் என்கின்ற காரணத்தினால், அந்த அணியின் கேப்டனுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து இப்படி நடந்தால் கேப்டனுக்கு போட்டியில் விளையாடவும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.